SJ Suryah : டைரக்டர் எஸ்.ஜே சூர்யா இஸ் பேக்.. புதிய படத்தை அறிவித்த இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா!
SJ Suryah New Movie Announcement : தமிழ் சினிமாவில் நடிப்பின் அரக்கன் என்று அழைக்கப்பட்டுவருபவர் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குநராக களமிறங்கிய இவர், தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் தான் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah) தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் படங்களில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, பின் இயக்குனராக உருவெடுத்த இவர், அஜித் குமாரின் (Ajith Kumar) வாலி (Vaalee) படத்தை இயக்கி பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் (Vijay) நடிப்பில் குஷி (Kushi) என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு தான் இயக்கும் படத்தில், தானே ஹீரோவாகவும் நடித்துவந்தார். மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அவர் கில்லர் (Killer) என்று டைட்டிலை வைத்துள்ளார். தற்போது இந்த படத்துக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸை கொடுத்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.




எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட கில்லர் பட அறிவிப்பு பதிவு :
Hi folks , Ur Director S.J.Suryah is bk 🥰🥰🥰 with His Dream project titled, Yah U know it 🔥🔥🔥#KILLER🔥🔥🔥 feeling blessed and happy to collaborate with the most prestigious @GokulamMovies Gokulam Gopalan sir 🥰🥰🥰🥰 need Ur love and support as always🥰🥰🥰 love U all 🙏SJS… pic.twitter.com/XlLK5GY3Jb
— S J Suryah (@iam_SJSuryah) June 27, 2025
எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் திரைப்படம் :
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராக கில்லர் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பற்றி அவர் முன்னதாகவே, வீர தீர சூரன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது அப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கில்லர் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவே ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். மேலும் அவருக்கு ஜோடியாக அயோத்தி மற்றும் கிஸ் படத்தில் நடித்த, நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார்.
மேலும் இந்த கில்லர் படத்தை கோகுலம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிக்கவுள்ளார். எஸ்.ஜே. சூர்யா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானியின் கூட்டணியில் இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை பற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகும் படம் :
நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் மற்றும் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 என இரு படங்கள் தயாராகிவருகிறது. இதில் கார்த்தியின் சர்தார் 2 படத்தில் மிக முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வரும் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.