STR49 Movie : வெற்றி நடை வீர நடை.. சிலம்பரசன் – வெற்றிமாறனின் STR 49 பட புரமோ வீடியோ இதோ!
Vetrimaaran And Silambarasan STR49 Promo : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தனுஷ் முதல் விஜய் சேதுபதி வரை பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைந்திருக்கும் நிலையில், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

STR49 படத்தின் ப்ரோமோ வீடியோ
நடிகர் சிலம்பரசன் (Silambarasan), குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை டி.ராஜேந்திரனின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தற்போதுவரையிலும் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து சிலம்பரசன் நடித்திருந்தார். மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த படத்தை வி கிரியேஷன் (V Creation) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ மற்றும் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில், சிலம்பரசனுடன் படத்தில் இணைந்ததாக வெற்றிமாறன் உறுதிபடுத்தினார். இந்நிலையில் இன்று 2025, செப்டமபர் 4 ஆம் தேதியில் வெற்றிமாறன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு சிலம்பரசனின் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : சர்ப்ரைஸாக இருந்தது.. லோகா படத்தை பாராட்டிய சூர்யா – ஜோதிகா- நஸ்லென் நெகிழ்ச்சி
சிலம்பரசனின் புதிய படத்தின் அறிவிப்பு பதிவு
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை
அகவை 50-ல்
வெற்றி மாறனின் புகழ்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
பிறந்த நாள் வாழ்த்துகள்.▶️https://t.co/6QoXAEpC0d@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu#RVelraj
— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணி
வெற்றிமாறன் விடுதலை பார்ட் 2 படத்தை அடுத்தாக வாடிவாசல் படத்தில் இணைவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில காரணங்களால் அந்த படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிலம்பரசனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். நடிகர் சிலம்பரசனும் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணின் இயக்கத்தில் STR49 படத்தில் நடிக்க தொடங்கிய நிலையில், சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சினிமாவில் விஜய் என் தம்பி.. இப்போது அப்படி இல்லை.. இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்!
இதன் காரணமாகவும் வெற்றிமாறனுடன் சிலம்பரசன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த சிலம்பரசனின் இந்த புதிய படமானது, துனுஷின் வட சென்னை படத்தின் கதைக்களம் கொண்ட படமாக உருவாக்கவுள்ளதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். லோகேஷின் LCU தொடர்படங்கள் போல, வெற்றிமாறனும் வட சென்னை படத்தின் கதையின் பின்னணியில் இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படமானது வட சென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தின் கதைக்களத்தை, அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளதகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025 அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.