சமூக வலைதளங்களில் உடல் எடையை குறைக்கும் முயற்சிகள் அதிக கவனம் பெறும் நிலையில், அளவுக்கு மீறிய உணவுக் கட்டுப்பாடு உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை சம்பவமாக சீனாவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சீனாவின் ஷான்சி மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான பெண் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், கடந்த 6 மாதங்களாக வேகவைத்த கோழியின் பிரெஸ்ட் மற்றும் காய்கறிகள் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டுள்ளார்.