LIK Movie: பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் 3வது பாடல் புரோமோ வெளியீடு!
Love Insurance Kompany Movie Update: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே தயாரான படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இன்னும் இப்படமானது ரிலீஸ் செய்யப்படவில்லை என்ற நிலையில், தற்போது இப்படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான லவ் டுடே (Love Today) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் தமிழில் இதற்கு முன் ரவி மோகனின் (Ravi Mohan) நடிப்பில் வெளியான கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த் படமானது பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து தனது இயக்கத்திலே லவ் டுடே என்ற படத்தய் இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். இப்படமும் எதிர்பாராததாகி விடவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. கதாநாயகனாக நடித்த படம் வெற்றிபெற தொடர்ந்து, நடிகராக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் கதாநாயகனாக இவர் 3வது ஒப்பந்தமான திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இதில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்க, நயன்தாராவின் (Nayanthara) ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ளது.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரு பாடல்களும் தற்போதும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்நிலையில் இதையடுத்து 2026ம் ஆண்டு காதலர் தினச் சிறப்பாக, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட 3வது பாடல் “எனக்கென யாருமில்லையே” (Enakenna Yaarum Illaye) ரிலீஸ் தேதி அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சசிகுமாரின் மனிதம் ஜெயித்ததா? மை லார்ட் படம் எப்படி இருக்கு? – விமர்சனங்கள் இதோ!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் 3வது சிங்கிள் ரிலீஸ் எப்போது :
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் 3வது பாடல், “எனக்கென யாருமில்லையே” நாளை 2026 பிப்ரவரி 14ம் தேதியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலானது கடந்த 2015ம் ஆண்டில் அனிருத்தின் ஆல்பமாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பின் தற்போது இப்பாடல் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு காதலர்கள் தின சிறப்பாக இப்படலானது வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோவினோ தாமஸின் பள்ளிச்சட்டம்பி படத்தின் ‘காட்டு செண்பகமே’ பாடல் வெளியீடு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் 3வது பாடல் ரிலீஸ் குறித்து வெளியான பதிவு:
And 1️⃣1️⃣ years later, with the same heartbreak! 🥹💔#Enakena OFFICIAL VIDEO DROPS TOMORROW 🤍🥰
Watch the promo now ➡️https://t.co/lVZugmjewT@anirudhofficial #VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty @Rowdy_Pictures @7screenstudio pic.twitter.com/J6Ye2D6c4o
— Sony Music South India (@SonyMusicSouth) February 13, 2026
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸில் என்ன பிரச்சனை :
இந்த படமானது முதலில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. பின் இந்த் படத்தில் சில எடிட்டிங் வேலைகள் முடியாத நிலையில், பின் 2026 அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்கு வெளியாக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படமும் வெளியாகும் என அறிவித்த நிலையில், LIK படக்குழு பின் வாங்கியிருந்தது. இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் வெளியாகவும் என கூறப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்தில் பிரச்சனையின் காரணமாக ரிலீசாகவில்லை. மேலும் இன்னும் இப்படக்குழு ரிலீஸ் தேதி எப்போது என உறுதி செய்யவில்லை. இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.