OTT Update: ‘பறந்து போ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. தேதி அறிவிப்பு!
Paranthu Po Movie OTT Release : இயக்குநர் ராம் மற்றும் நடிகர் மிர்ச்சி சிவாவின் கூட்டணியில் இறுதியாக வெளியான திரைப்படம் பறந்து போ. இந்த படமானது முற்றிலும் குழந்தை மற்றும் பெற்றோர் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் திரையரங்குகளில் வெளியீட்டை அடுத்ததாக, இடத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை, எந்த ஓடிடியில், எப்போது பார்க்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்கதைகளைக் கொடுத்து, மக்களிடையே நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் இயக்குநர் ராம் (Ram). இவரை இயக்கத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் பறந்து போ (Paranthu Po). இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் மிர்ச்சி சிவா (Mirchi Shiva) நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவான இப்படம் கடந்த 2025, ஜூலை 4ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி (Anjali), விஜய் யேசுதாஸ் உட்படப் பல பிரபலங்கள் இணைந்தது நடித்திருந்தனர். இதில் நடிகை அஞ்சலியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்பா மற்றும் மகன் போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் ஓடிடி (OTT) ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது. எந்த ஓடிடியில் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?




பறந்து போ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் ;
நடிகர் மிர்ச்சி சிவா மாறுபட்ட கதாநாயகனாக நடித்திருந்த படம் பறந்து போ. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் தயாநிதி என இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஓடிடியில் ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிதியில், வரும் 2025, ஆகஸ்ட் 5ம் தேதியில் “ஜியோஹாட் ஸ்டார்” ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!
பறந்து போ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு பதிவு :
Taking off to a whole new ride 🪁#ParanthuPo streaming from August 5 ❤️#JioHotstar presents #ParanthuPo streaming from August 5 on JioHotstar#ParanthuPoStreamingFromAugust5 #ParanthuPoOnJioHotstar #jiohotstartamil @actorshiva #GraceAntony @yoursanjali @AjuVarghesee… pic.twitter.com/lyK9va4dPB
— JioHotstar Tamil (@JioHotstartam) August 1, 2025
பறந்து போ படத்தின் கதைக்களம் :
இந்த பறந்து போ திரைப்படத்தின் கதைக்களமானது, ஆடம்பரமாகக் குழந்தையை வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்க நினைக்கும் பெற்றோர், ஆனால் வெளியில் சுதந்திரமாக விளையாட நினைக்கும் மகன் என மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் மிர்ச்சி விவாவின் மகனாக, குழந்தை நட்சத்திரம் மீதுள் ரயான் நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி சிவா எப்போதும்போல் நகைச்சுவை ஜானர் இல்லாமல் எமோஷனல் மற்றும் அப்பா மகன் கதைக்களத்துடன் மிகவும் அருமையாக வெளியாகியிருந்தது.