பீகார் மாநிலம், புத்தகயாவில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புத்தகயாவில் உள்ள ஹோட்டலில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி திருமண விழா நடைபற்றது. இந்த விழாவில், மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. அந்த உணவில் அனைவருக்கும் ரசகுல்லா பரிமாறப்பட்டது. ஒரு கட்டத்தில் திருமண விழாவுக்கு வந்தவர்களுக்கு பரிமாறுதற்கு ரசகுல்லா காலியானதாக கூறப்படுகிறது.