உலகம் முழுக்க ஏலியன் குறித்து, நூற்றாண்டுகளாகவே கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இந்த முறை, சர்ச்சையின் மையத்தில் இருப்பவர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ். புதிய அமேசான் பிரைம் ஆவணப்படமான “தி ஏஜ் ஆஃப் டிஸ்குளோசர் உலகுக்கு ஒரு புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்பட்டத்தில், விஞ்ஞானி எரிக் டேவிஸ் என்பவர், ஜார்ஜ் புஷ் தனிப்பட்ட முறையில் தன்னைச் சந்தித்து, 1960களில் அமெரிக்க அரசு ஒரு மனிதரில்லாத உயிரினத்துடன் நேரடியாக தொடர்பில் இருந்தது என்று கூறியதாக வெளிப்படுத்துகிறார்.