பீகார் மாநிலத்தில், பாட்னாவிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், வைஷாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது சரசாய் என்ற அதிசய கிராமம். இங்கு வவ்வால்களை மக்கள் தங்களைக் காக்கும் தெய்வீக காவலர்களாக கருதுகிறார்கள். சரசாய் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமையான ஆலமரம், அரசமரம், நாவல் மரம் ஆகியவற்றின் ஒவ்வொரு கிளையும் ஆயிரக்கணக்கான வவ்வால்களின் வீடுகளாக இருக்கிறது.