உலக அரசியல் அரங்கில், எப்போதும் மர்மத்தால் சூழப்பட்டிருப்பவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அவரது பாதுகாப்பு எத்தனை அடுக்குகளைக் கொண்டது, எவ்வளவு ரகசியமாக செயல்படுகிறது என்பதை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாவலர்கள், உணவுப் பாதுகாப்பு, தனி மருத்துவ குழு ஆகியவை எப்போதும் அவருடன் இருக்கும் முக்கிய விஷயங்கள். இதற்கிடையே, அவருடைய மலம் சேகரிக்கும் சூட் கேஸ் பற்றிய ரகசியம், உலக அளவில் பேசுபொருளாக மாறியிருக்கறது. நம்ப முடியாததாக இருந்தாலும், பல சர்வதேச பயணங்களில் புதின் எடுத்துச் செல்லும் அந்த மர்மமான சூட் கேஸின் நோக்கம் மிகவும் ரகசியமானது.