Mohanlal: இயக்குநர் பிரியதர்ஷனின் 100-வது திரைப்படத்தில் இணைந்த மோகன்லால் – வைரலாகும் பதிவு!
Priyadarshans 100th Film: பான் இந்திய பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரியதர்ஷன். இவர் இதுவரை கிட்டத்தட்ட 99 திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது அவர் இயக்கும் 100-வது திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக புகழ்பெற்றவர் பிரியதர்ஷன் (Priyadarshan). இவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் (Kaylani Priyadarshan) தந்தை ஆவார். இவர் மலையாள சினிமாவில் பல படங்களை இயக்கியிருக்கும் நிலையில், மேலும் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜ் (Prakash Raj) இயக்கத்தில் காஞ்சிவரம் (Kanjivaram) என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இவருக்கு, சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் இவருக்கு இப்படம் தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. அந்த விதத்தில் இவ்வாறு பல்வேறு படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக தற்போதுவரையிலும் சினிமாவில் இருந்துவருகிறார். சினிமாவில் கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் இவர், தமிழில் லேசா லேசா, கோபுர வாசலிலே , சிநேகிதியே, அப்பத்தா மற்றும் நிமிர் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் பாலிவுட்டில் பூத் பங்களா எந்த படம் தயார்க்கியுள்ளது. இதில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். மேலும் 97வது படமாக ஹைவான் படமும், அன்னு கபூர் மற்றும் பஞ்சஜ் திரிபாதி நடிப்பில் 98வது படத்தையும் இயக்கியுள்ளார். இதையடுத்து தற்போது தனது 100வது படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் (Mohanlal) இணைந்துள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: கருப்பு பட கதையை முதலில் விஜய் சாரிடம்தான் சொன்னேன் – உண்மையை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி!
பிரியதர்ஷன் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாகும் 100வது படம் குறித்த அறிவிப்பு பதிவு:
Some milestones do not belong to one person alone. They belong to everyone who stood close enough to witness the journey.
My dearest Priyan is stepping into his 100th film, and I find myself without words for what that truly means to me.
A hundred films is not just a number. It… pic.twitter.com/9AXJyjTNdW
— Mohanlal (@Mohanlal) March 21, 2026
இயக்குநர் பிரியதர்ஷன் கடந்த 1984ம் ஆண்டில் பூச்சாக்கொரு மூக்குத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்கிய முதல் படத்திலே நடிகர் மோகன்லால்தான் நாயகனாக நடித்திருந்த. இவர்கள் இருவரின் கூட்டணியில் தென்மாவின் கொம்பத், மின்னரம், ஒப்பம் மற்றும் காலாபாணி போன்ற ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் தற்போது பிரியதர்ஷன் தனது இயக்கத்தில் 100வது படத்தில், மோகன்லாலுடன் இணைந்துள்ளார். இந்த படமானது இசையை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்திருந்தார் .
இதையும் படிங்க: அதனால் பலமுறை கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.. இப்போது அதை சமாளிக்க கற்றுக்கொண்டேன் – ஸ்ரீலீலா!
இந்த கூட்டணியில் உருவாகும் படத்தை ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இயக்குநர் பிரியதர்ஷன், தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து இயக்கி, தற்போது தனது 100வது படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி, புதிய உலக சாதனையை படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைவரின் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திவருகிறது.