Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar: அஜித்துடன் இணையும் மோகன்லால்? – AK64 பற்றி வெளியான அப்டேட்!

Ajith Kumar AK64 Movie Update : தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், அதை தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் 64வது திரைப்படத்தில் மலையாள பிரபல நடிகர் மோகன் லால் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Ajith Kumar: அஜித்துடன் இணையும் மோகன்லால்? – AK64 பற்றி வெளியான அப்டேட்!
அஜித் குமார் மற்றும் மோகன்லால்Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 16:00 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) கோலிவுட் சினிமா மட்டுமில்லாமல் பான் இந்திய நடிகராகக் கருதப்படுகிறார். கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். பிரம்மாண்ட படமாகக் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers)  நிறுவனமானது தயாரித்திருந்தது. வெளியாகி சுமார் ரூ. 250 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். மேலும் நடிகர்கள் பிரபு, சுனில், அர்ஜுன்தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் தனது 64வது படத்திலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துடன் நடிகர் மோகன் லாலும் (MohanLal)இணைந்து நடிக்கவிருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் மோகன் லாலுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடந்து வருவதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு :

அஜித் குமார் – ஆதிக் ரவிச்சந்திரன் மறு கூட்டணி :

அஜித் குமாரை 64வது படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கும் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அஜித் குமாரின் 64வது திரைப்படத்தில் அவருடன் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இவர் கன்னடத்தில் கேஜிஎப் மற்றும் தமிழில் கோப்ரா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக நானியுடன் ஹிட் 3 படத்தில் ஆக்ஷ்ன் நாயகியாக நடித்திருந்தார்.இவர் இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் 2வது திரைப்படமாக அஜித்துடன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் இப்படத்தில் நடிகர் மோகன் லாலும் இணையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவல்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோ, அல்லது தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.