Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vikram Prabhu : விக்ரம் பிரபுவின் அசத்தலான நடிப்பு.. வெளியானது ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர்!

Vikram Prabhus Love Marriage movie Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் விக்ரம் பிரபு. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம்தான் லவ் மேரேஜ். காதல் மற்றும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Vikram Prabhu : விக்ரம் பிரபுவின் அசத்தலான நடிப்பு.. வெளியானது ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர்!
லவ் மேரேஜ் திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 19 Jun 2025 14:44 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் பிரபு (Prabhu). இவரின் மகனும், பழம்பெரும் நடிகரான சிவாஜி கணேசனின் பேரனுமானவர்தான் விக்ரம் பிரபு (Vikram Prabhu). தனது தந்தை பிரபுவைப் போல நடிப்பில் ஆர்வமாக்க நடிகர் விக்ரம் பிரபு தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான கும்கி (Kumki)  என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அசத்தல் நாயகனாக நுழைந்தார். அதைத் தொடர்ந்து காதல், ஆக்ஷ்ன், மற்றும் பீல் குட் திரைப்படங்கள் எனப் பல ஹிட் படங்களை இவரின் நடிப்பில் கொடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் இறுதியாக ரெய்ட் (Raid) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு அறிமுக இயக்குநர் கார்த்தி இடத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் இவர் நடித்து வந்த படம்தான் லவ் மேரேஜ் (Love Marriage). இந்த திரைப்படத்தை இயக்குநரும், எழுத்தாளருமான சண்முக ப்ரியன் (Shanmuga Priyan) இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை சுஷ்மிதா நடித்துள்ளார். அதிரடி காதல் மற்றும் குடும்ப கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லவ் மேரேஜ் திரைப்பட குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

லவ் மேரேஜ் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :

இயக்குநர் சண்முக ப்ரியனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது அதிரடி காதல் மற்றும் பேமிலி என்டர்டெயினர் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் அறிமுக நாயகி சுஷ்மிதா நடித்துள்ளார். இசையமைப்பாளர் சென் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், மேலும் இவர்களுடன் நடிகர்கள் ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், சத்யராஜ் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஜூன் 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விக்ரம் பிரபுவின் புதிய படங்கள் :

நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள காதி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார்.

இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது அதிரடி மாஃபியா திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அனுஷ்காவின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படமானது, பான் இந்திய மொழிகளில் வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.