Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sekhar Kammula : நான் உறுதியாக கூறுகிறேன்.. குபேரா நிச்சயம் அருமையான படம் – சேகர் கம்முலா!

Sekhar Kammulas Firm Speech : ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியிருக்கும் படம் குபேரா. நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை, இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சேகர் கம்முலா குபேரா படத்தை பற்றி ரசிகர்களுக்கு உறுதி கொடுத்துள்ளார்.

Sekhar Kammula : நான் உறுதியாக கூறுகிறேன்.. குபேரா நிச்சயம் அருமையான படம் – சேகர் கம்முலா!
சேகர் கம்முலாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jun 2025 21:47 PM

நடிகர் தனுஷின் (Dhanush)  முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் குபேரா (Kuberaa). தனுஷின் 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தைத் பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula)  இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த குபேரா படமானது தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் மிக முக்கிய நாயகனாக நடித்துள்ள நிலையில், இப்படத்தில் அவருக்கு இணையான ரோலில் நடிகர் நாகார்ஜுனா (Nagarjuna)  இணைந்து நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் (Devi Sri Prasad) இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 2025, ஜூன் 15ம் தேதியில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சேகர் கம்முலா, படத்தினை பற்றி உறுதியளித்துள்ளார். “நிச்சயமாகக் குபேரா அருமையான படம்” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியதை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

குபேரா இயக்குநர் கொடுத்த உறுதி பேச்சு :

குபேரா படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சேகர் கம்முலா, படத்தைப் பற்றியும் அதில் நடித்துள்ள நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் தனுஷைப் பற்றியும் பேசியிருந்தார். அப்போது அவர் மேடையில், குபேரா படத்தின் கதைக்களம் பற்றி ஓபனாக பேசியிருந்தார்.

அதில் இயக்குநர் சேகர் கம்முலா, “நான் மிகவும் பணிவுடன் கூறுகிறேன், குபேரா படத்தைப் போல நீங்கள் இதற்கு முன் வேறு எந்த படத்தையும் பார்த்திருக்கமாட்டீர்கள் . இந்த படம் ஒரு புதிய கதைக்களம், மேலும் இப்படத்தின் ஸ்டோரி அனைவரையும் நிச்சயமாகக் கவரும் உண்மையான பான் இந்தியப் படமாக இது இருக்கும். இந்த படத்தில் காதல் , உணர்ச்சி, ஆச்சரியங்கள் மற்றும் திரில்லர் எனப் பல கதைக்களங்கள் உள்ளன. இந்த குபேரா  ஒரு அருமையான படம் என்று நான் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்” என இயக்குநர் சேகர் கம்முலா மேடையில் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இயக்குநர் சேகர் கம்முலா பேசிய வீடியோ :

குபேரா படத்தின் ப்ரீ புக்கிங் :

தனுஷின் குபேரா படமானது பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, ஜூன் 15ம் தேதியில் வெளியான நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது