AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

South Indian Cinema OTT Release This Week Update Here: தென்னிந்திய சினிமாவில் வாரம் வாரம் திரையரங்குகளில் படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஓடிடியிலும் தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று தற்போது பார்க்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Apr 2026 20:21 PM IST

வடம் படம்: தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அதிக அளவில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வரிசையில் ஒன்றாக தமிழ் சினிமாவில் வெளியான படம் தான் வடம் (Vadam Movie). இந்தப் படத்தில் நடிகர் விமல் (Actor Vemal) நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் நட்டி சுப்ரமணியம் (Actor Natty Subramaniam), சனஷ்க ஸ்ரீ, பால சரவணன், முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், தீபா சங்கர், இந்துமதி மணிகண்டன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குநர் கேந்திரன் வி எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கலவையான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சரஸ்வதி படம்: தெலுங்கு சினிமாவில் க்ரைம் த்ரில்லர் பாணியில் கடந்த மார்ச் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சரஸ்வதி. நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். மேலும் அவரே கதையின் நாயகியாகவும் நடித்து இருந்தார். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… Ajith Kumar: ஒர்க் ஷாப் வைக்கணும்-னு ஆசை.. நான் சினிமாவிற்கு வந்த காரணமே அதுதான் – அஜித் சொன்ன விஷயம்!

வெள்ளப்பம் படம்: மலையாள சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள படம் வெள்ளப்பம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த வெள்ளப்படம் படத்தை இயக்குநர் பிரவீன் ராஜ் பூக்காடன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் அக்‌ஷய் ராதாகிருஷ்ணன், நூரின் ஷெரீஃப், ஷைன் டாம் சாக்கோ, ரோமா அஸ்ரானி மற்றும் ஸ்ரீஜித் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… காக்கி சட்டை – கொடி படங்களில் அப்படி நான் செய்தது தவறு… இயக்குநர் துரை செந்தில் குமார் ஓபன் டாக்

Follow Us