Krithi Shetty: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடிக்க கிரித்தி ஷெட்டி சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Krithi Shetty Salary For LIK: இளம் நடிகையாக ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்துவருபவர் கிரித்தி ஷெட்டி. இவர் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் நடிப்பதற்காக இவர் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கிரித்தி ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் சிறந்த இளம் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கிரித்தி ஷெட்டி (Krithi Shetty). இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் முற்றிலும் காதல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இவர் “தீமா” என்ற வேடத்தில் நடித்திருந்த நிலையில், திரையரங்குகளில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். தற்போது இந்த திரைப்படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நடிகை கிரித்தி ஷெட்டி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வைரலாகிவருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு அவர், ரூ 1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தனது முதல் படமான உப்பென படத்தில் ரூ 6 லட்சம் சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது ரூ 1 கோடியை சம்பளமாக பெரும்வகையில் வளர்த்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
இதையும் படிங்க: டிராகன் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சாய் அபயங்கர்.. ஹீரோவா? இசையமைப்பாளரா?
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் குறித்து கிரித்தி ஷெட்டி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
நடிகை கிரித்தி ஷெட்டி தற்போது தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடிப்பதில் ஆற்வம் காட்டிவருகிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் மொத்தம் 3 தமிழ் படங்கள் தயாராகியிருந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வா வாத்தியார் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து 2026 ஏப்ரல் 10ம் தேதியில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படமானது வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டாக பார்க்கிறேன் – மாளவிகா மோகனன்!
அந்த வகையில் இவரின் நடிப்பில் 3வது வெளியாக காத்திருக்கும் படம்தான் ஜீனி. இதில் ரவி மோகன், கிரித்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பேண்டஸி கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட 1 ஆண்டுகளாகியுள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகிவிடும் என தயாரிப்பாளரும் கூறியுள்ளார். அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் கிரித்தி ஷெட்டியின் நடிப்பில் மொத்தம் 3 படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.