Kara Movie: கர படத்தில் கருணாஸ் நடிக்கும் வேடம் இதுவா? – படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
Karunaas' Character Introduction: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் ஆரம்பத்தில் டி54 என அறிவிக்கப்பட்ட படம்தான் கர. ஏற்கனவே தனுஷின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து மற்ற நடிகர்களில் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில் போர் தொழில் (Por Thozhil) படத்தின் வெற்றிக்கு பிறகு உருவாகிவரும் படம்தான் “கர” (Kara). இந்த படத்தில் உச்ச நாயகனாக நடிகர் தனுஷ் (Dhanush) நடித்துள்ளார். விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷின் தமிழ் படங்களிலு தொடர்ந்து இசையமைதுஹ்வருகிற என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தனுஷின் 54வது படமாக தயாராகியிருப்பதுதான் கர. இந்த படத்தில் தனுஷ் அதிரடி வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். தமிழில் இவருக்கு முதலில் வெளியாகும் பிரம்மாண்ட படமாகும். ஜன நாயகன் படம் (Jana Nayagan)வெளியாகியிருந்தால், அது இவருக்கு முதல் பிரம்மாண்ட படமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கர திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் “வாயா ஏய் கரசாமி” என்ற பாடலும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், இப்பட நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் தற்போது நடிகர் கருணாஸின் (Karunaas) கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் “காசி மாயன்” (Kasi Maayan) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




இதையும் படிங்க: கர படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு கதாப்பாத்திரத்தின் பெயர் இதுதான் – வெளியானது போஸ்டர்
கர படத்தில் நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Climbing up… straight into the world of #Kara.
Kasi Maayan.Next drop tomorrow at 11 AM ❤️#FacesOfKara#KaraFromApril30
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical@dhanushkraja #Karunaas @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd pic.twitter.com/9DYBL1eqGo— Vels Film International (@VelsFilmIntl) March 25, 2026
நடிகர் கருணாஸ் இந்த படத்தில், காசி மாயன் வேடத்தில் நடித்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் இவரின் கதாபாத்திரம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இப்படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற வேடத்தில், மமிதா பைஜூ “செல்லி “என்ற வேடத்தில், கே.எஸ்.ரவிக்குமார் “கந்தசாமி” என்ற வேடத்தில் மற்றும் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு “பரதன்” என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதையடுத்து தற்போது கருணாஸின் நடிகரின் கதாபாத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழிலும் வெளியாகும் சாய் பல்லவியின் இந்தி திரைப்படம்.. வெளியானது ‘ஒரு நாள்’ படத்தின் ட்ரெய்லர்!
இந்த கர படமானது கிராமத்து ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. தனுஷ் இதில் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது போர் தொழில் படத்தைப் போலவே திரில்லர் கதையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படம் வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இதன் கதாபாத்திரம் அறிமுக அப்டேட் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், இதையடுத்து 2வது பாடல் போன்ற அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படம் தனுஷிற்கு வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.