AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த தளபதி விஜய் – கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்

Kollywood celebrities are celebrating Thalapathy Vijay's victory in the Tamil Nadu Assembly elections: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ம் ஆண்டிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் தளபதி விஜயின் தவெக கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியடைந்த தளபதி விஜய் – கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்
தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 May 2026 18:49 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் நடிகர் விஜய். இவர் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கி திவீர அரசியலில் ஈடுபடுவது மக்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது. இந்த நிலையில் சினிமா பிரபலம் வெற்றி பெற மாட்டார் என்ற எண்ணங்களை மாற்றி தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் உடன் பணியாற்றிய திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோலிவுட் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை நடிகர் தளபதி விஜய்க்கு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகர் அருண் விஜய் கூறியதாவது, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்… தனியே நின்று களத்தில் வெற்றி பெற்ற தவெகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.. முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.  இது மக்களின் வெற்றி என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகர் சதீஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, தொகுதி…. சின்னம்…. வேட்பாளர்….அனைத்தையும் தாண்டி வென்றது விஜய் என்ற ஒற்றை முகம். வென்றது ஜனநாயகம். வென்றார் ஜனநாயகன். எப்பவுனே லவ் யூ சிஎம் சார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகர் லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, வாழ்த்துகள், என் நண்பா நடிகர் விஜய். இன்று நீ உண்மையிலேயே வரலாறு படைத்திருக்கிறாய். உன் மகிழ்ச்சிக்காக நான் எப்போதும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

முதல்வர் அண்ணா… நடிகர் விஜய். நீங்கள் என்னிடம் “பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினீர்கள். இன்று சொன்னதைச் செய்தே காட்டிவிட்டீர்கள் அண்ணா! இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராதது; இனிமேலும் நிகழப்போகாதது. நான் எப்போதும் உங்கள் பக்கபலமாகத் துணை நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, லெஜெண்ட்ரி எண்ட்ரி, ஹிஸ்டாரிக் விக்ட்ரி விஜய் சார் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகை மஞ்சிமா மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, முழுமையான வெற்றி. அதுவும் எப்பேர்ப்பட்ட வெற்றி. என்னவொரு மகத்தான வெற்றி! இதைக் காண்பதில் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். ஒரு ரசிகனாக, இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன். இது வரவிருக்கும் இன்னும் பல வெற்றிகளுக்கு வெறும் தொடக்கமாகவே அமையும் என்று நம்புகிறேன்.

Also Read… ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, “நான் ஒரு தடவ சொல்லேன், நூறு தடவ சொன்ன மாதிரி” இன்று, மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் எதிரொலித்துள்ளனர். இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு நடிகர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும் ஒரு உண்மையான சான்றாகும்.

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

நடிகர் கவின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் ஒரே மனிதர். ஒரே கட்சி. இத்தகைய வாக்கு சதவீதம்… வரலாறு படைக்கப்பட்டு வருகிறது! இதை நம் காலத்திலேயே காணும் பேறு பெற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

Also Read… நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லஹேம் குடும்ப யூனிட் பட ஷூட்டிங் நிறைவு – வைரலாகும் பதிவு!

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்:

இயக்குநர் ஆர்.ஜே,பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. விஜய் சார் அவர்களுக்கும், நமது அற்புதமான மாநிலமான தமிழ்நாட்டின் மக்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us