Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Entertainment News Live Updates: ரஜினிகாந்தை சந்தித்த கமல் ஹாசன்.. என்ன காரணம்?

Entertainment News in Tamil, 16 July 2025, Live Updates: மீபத்தில் திமுக உடன் கூட்டணி அமைத்த கமல் ஹாசன், ராஜ்ய சபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். பலரும் கமல் ஹாசனுக்கு வாழத்து தெரிவித்து வரும் நிலையில் அதனை தனது நீண்ட கால நண்பரான ரஜினிகாந்துடன் பகிர்ந்து கொள்ள நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 16 Jul 2025 17:18 PM
Entertainment News Live Updates: ரஜினிகாந்தை சந்தித்த கமல் ஹாசன்.. என்ன காரணம்?
சினிமா நேரலை

LIVE NEWS & UPDATES

  • 16 Jul 2025 05:15 PM (IST)

    திரைப்படங்களுக்கு மூச்சு விட அவகாசம் தேவை: நடிகர் விஷால் வேண்டுகோள்!

    ‘ரெட் ஃபிளவர்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷால், ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகும் போது  3 நாட்கள், குறைந்தத 12 காட்சிகள் அந்தப் படம் மூச்சு வாங்க அவகாசம் அளிக்க வேண்டும். அந்த காலக்கட்டத்தில் யூடியூப் சேனல்கள் திரையரங்கிற்குள் சென்று மக்களின் கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.

  • 16 Jul 2025 05:07 PM (IST)

    ரெடியா மாமே… குட் பேட் அக்லி பட பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு!

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக மாஸ் காட்சிகளுக்கு தனது இசை மூலம் ஜி.வி.பிரகாஷ் குமார் கூடுதல் வலு சேர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் பின்னணி இசை தயாராகி வருவதாக ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

     

  • 16 Jul 2025 04:52 PM (IST)

    சினிமா டிக்கெட் விலை ரூ.200க்கு மேல் இருக்க கூடாது – கர்நாடக அரசு உத்தரவு

    கர்நாடகா மாநிலத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை ஜிஎஸ்டியுடன் சேர்த்து 200 ரூபாய்க்கு அதிகமாக இருக்க கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது மல்டிபிளெக்ஸ், சிங்கிள் ஸ்கிரீன், ஏசி, நான் ஏசி என அனைத்து திரையரங்குகளுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் விலையில் முறைக்கேடு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  • 16 Jul 2025 04:32 PM (IST)

    கவினுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன் – வெளியான அறிவிப்பு!

    திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை கனா காணும் காலங்கள் தொடரை இயக்கிய கென் ராய்சன் இயக்கவிருக்கிறார்.  இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

  • 16 Jul 2025 04:20 PM (IST)

    கூலி படம் வெளியாகும் அடுத்த நாள் என்னுடைய பிளான் இதுதான்! – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்

     

    ரஜினிகாந்த், ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பாக இவர் அளித்த பேட்டி ஒன்றில், கூலி படம் வெளியான அடுத்த நாள் நண்பர்களுடன் யாருக்கும் தெரியாத இடத்துக்கு சென்றுவிடுவேன். நான் எங்கே இருப்பேன் என யாருக்கும் சொல்ல மாட்டேன். திரும்பி வந்த பிறகே கூலி படத்தின் விமர்சனம் மற்றும் வசூல் குறித்து பார்ப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 16 Jul 2025 04:03 PM (IST)

    சூர்யா – ஆர்ஜே பாலாஜியின் கருப்பு – வெளியான அப்டேட்!

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்துக்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக இந்தப் படத்தை தயாரித்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • 16 Jul 2025 03:44 PM (IST)

    மக்களுக்காக புதிய படம்… விடியல் ஆரம்பம் – இயக்குநர் சேரன் பகிர்ந்த தகவல்

    இயக்குநரும் நடிகருமான சேரன் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் நரிவேட்ட என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தனது அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயணம் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும்.ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காக தயாராகிறது. விடியல் ஆரம்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தனது புதிய படம் குறித்து இயக்குநர் சேரனின் எக்ஸ் பதிவு

     

  • 16 Jul 2025 03:36 PM (IST)

    தயாரிப்பு நிறுவனம் மீது ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் வழக்கு!

    நடிகர் ரவி மோகன் தங்களிடம் இருந்து படம் நடித்து தருவாக ஒப்பந்தம் செய்து, ரூ.6 கோடி பெற்று, படம் நடிக்காமல் ஏமாற்றியதாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.இதுகுறித்து நடிகர் ரவி மோகன் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை துவங்காமல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ. 9 கோடி இழப்பீடு கேட்டு ரவி மோகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  • 16 Jul 2025 03:25 PM (IST)

    கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்கவை உறுப்பினராக வருகிற ஜூலை 25, 2025 அன்று பதவியேற்கவிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பதிவு

     

  • 16 Jul 2025 03:03 PM (IST)

    கமல்ஹாசனுக்கும் ஆமிர் கானுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்! – லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சீக்ரெட்

    கூலி படம் தொடர்பாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், “கமல் சார் மற்றும் ஆமிர் கான் இருவரும் நடிப்பில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்டவர்கள். கமல் சாரிடம் நடிப்பில் நீங்கள் சிறிய திருத்தங்களை சொல்லினால் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துவார். ஒரு காட்சிக்கு பல விதமாக நடித்துக் காட்டுவார். அதனால் எதனை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்படும். அதே மாதிரி தான் அமீர் கான் சாரும். இருவரிடம் நடிப்பில் சிறிய திருத்தங்களைக் கேட்டாலும் நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை காட்டுவார்கள் என்றார்.

தமிழ் சினிமா தனது பயணத்தை 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் இயக்கிய “கீச்சக வாதம்” என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கியது. இந்த ஆரம்பம், பின்னாளில் ஒரு பெரிய திரையுலக மரபாக வளர்ந்தது. நடிப்பு, இசை, தயாரிப்பு என தமிழ் சினிமா பல துறைகளில் முன்னேறி, பல திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது. அவர்கள் பலர் இந்தியாவின் பிற மொழிச் சினிமாக்களில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் தமிழ் சினிமாவை “Kollywood” என்றழைப்பது வழக்கமாகியுள்ளது. இந்திய சினிமாவில் ஹிந்தி படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப்படங்களுக்கே உலகளவில் அதிக ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இதனால், தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் ஒரு தனித்துவமான அடையாளம் உருவாகியுள்ளது. இன்று, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதிய பட அறிவிப்புகள், இசை வெளியீடுகள், நடிகர் தகவல்கள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது வெறும் ஒரு பொழுதுபோக்கு துறையாக இல்லாமல், தமிழ் மக்களின் உணர்வுடன் நெருக்கமாக இணைந்த கலாச்சார உலகமாகவும், உலகமே அறிந்த பெரும் திரை மரபாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் தமிழ் திரையுலகிலும், மற்ற மொழி சினிமா சார்ந்த விஷயங்களையும், திரையுலகில் நடக்கும் செய்திகளையும், சினிமா அப்டேட்களையும் இங்கு உடனுக்குடன் காணலாம். மேலும் புதுப்படம் தொடர்பான ரிவியூக்கள் மற்றும் ஓடிடியில் இருக்கும் படங்கள் தொடர்பான தகவல்களையும் இங்கு பெற முடியும்.

மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Published On - Jul 16,2025 8:02 AM