AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?

Tamil Director Childhood Photo: இணையதளங்கள் நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் சிறுவயது மற்றும் அடையாளமே தெரியாத புகைப்படங்கள் வைரலாகிவருவது தெரிந்ததே. அந்த விதத்தில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?. அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்

பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?
பிரபல இயக்குநரின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Apr 2026 08:33 AM IST

சோஷியல் மீடியா அதிக பயன்பாட்டினால் தற்போது சினிமாவில் பல்வேறு விஷயங்கள், மக்களின் கைக்கு நேரடியாக சென்றுவிடுகிறது. அந்த வகையில் சினிமா பிரபலன்களின் சிறுவயது புகைப்படம், அடையாளம் தெரியாத போட்டோஸ் மக்கள் மத்தியில் வைரலாகிவருகின்றன. அந்த விதத்தில் மேலே இருக்கும் போட்டோவில் உள்ள சிறுவன் யாருனு தெரிகிறதா?. இவர் பான் இந்திய பிரபல இயக்குநர். தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இயக்குநர் எஸ்.ஷங்கரின் (S Shankar) உதவி இயக்குநரும் கூட. இவருடன் எந்திரன் (Enthiran) முதல் நண்பன் (Nanban) வரை பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதையடுத்து இயக்குநராக ஆர்யாவை (Arya) வைத்து படத்தை இயக்கியிருந்தார். சிறப்பான காதல் கதைக்களத்தில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடனும் (Thalapathy Vijay) படத்தில் இணைந்திருந்தார்.

தளபதி விஜய்யுடன் வெறும் ஒருபடத்தை மட்டும் இயக்கவில்லை, கிட்டத்தட்ட 3 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட் சினிமாவில் பேமஸ் இயக்குநராக இருக்கிறார். இப்போது இந்த சிறுவன் யாரென தெரிந்திருக்கும். இவர் இயக்குநர் அட்லீ குமார்தான்(Atlee Kumar).

இதையும் படிங்க: திரிஷா முதல் சாய் பல்லவி வரை.. தேர்தலில் வாக்களித்த தமிழ் நடிகைகள்!

இயக்குநர் அட்லீ குமார் வெளியிட்ட போட்டோஷூட் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Atlee Kumar (@atlee47)

இயக்குநர் அட்லீ கடந்துவந்த சினிமா பாதை:

இயக்குநர் அட்லீ குமார் தனது சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர். தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், இயக்குநர் எஸ்.ஷங்கருடன் உதவி இயக்குநராக பணியாற்றிவந்தார். எந்திரன், நண்பன் என பல்வேறு படங்களிலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அண்ட் வகையில் இவர் இயக்குநராக அறிமுகமான படம் ராஜா ராணி. கடந்த 2013ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தது. இதில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஜெய் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதையடுத்து தளபதி விஜய்யுடன் தெறி என்ற படத்தில் இயக்கி பெரிய இயக்குநராக பிரபலமானார். இதையடுத்து மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கியு ஹிட் கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க: கர படத்தில் எனது செல்லி வேடம் இப்படிதான் இருக்கும் – மமிதா பைஜூ பேச்சு!

மேலும் இவர் ஆரம்பத்திலிருந்து உருவக்கேலி மற்றும் நிறத்தை பற்றியும் பலரும் கேலி செய்வதுண்டு. ஆனால் அதையெல்லாம் தவிர்த்து, தற்போது இந்தி சினிமாவில் முன்னை இயக்குனராக இருக்கிறார். ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி ரூ 1000 கோடிக்குமேல் வசூல் பெற்றிருந்தார். மேலும் தற்போது அல்லு அர்ஜுனின் நடிப்பில் ராக்கா என்ற படத்தய் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us