Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷின் ‘இட்லி கடை’ ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Idlikadai Ott release: தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தின ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் 52வது படமான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. அதோடு, சமீபத்தில் வெளியான படங்களில் குடும்பமாக சென்று பார்க்கும் திரைப்படம் என்ற அங்கீகாரத்தையும் இப்படம் பெற்றதால், திரையரங்கில் பேஃமிலி ஆடியன்ஸ் குவிந்தனர்.

தனுஷின் ‘இட்லி கடை’ ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இட்லி கடை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Oct 2025 17:53 PM IST

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘இட்லி கடை’. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில், நித்யா மேனன் கதாநாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்திருந்தனர். அதோடு, ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சமுத்திரகனி, சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக இப்படம் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் நான்காவது படமாக இருந்ததாலும் படத்தின் மீது எதிர்பார்ப்பும் இருந்தது. அதோடு, தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , இந்தி முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஒரு சிறந்த நடிகராக அறியப்பட்டுபவர்.

தனுஷ் இயக்கிய படங்கள்:

தனுஷ் இயக்கிய முதல் படமான ‘பவர் பாண்டி’யில் வயசான தம்பதிகளோட நிறைவேறாத காதலைக் கூறி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்து, வடசென்னையை மையமாக வைத்து அவர் இயக்கிய ‘ராயன்’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன. ஆனால், படத்தின் கதை சுமாரான ரகமாக இருந்ததால் வசூலை குவித்தாலும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. தொடர்ந்து, அவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படமும் பெரிதாகப் பேசப்படவில்லை. இதனால், நான்காவது படமாக ‘இட்லி கடை’ படத்தில் தனது இயக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவார் என அதன் மீது எதிர்பார்ப்பு எழுந்தது.

Also read: ரஜினி – கமல் இணையும் படம்: முக்கிய அப்டேட் கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்!

‘இட்லி கடை’ படத்தின் கதை:

மூன்று படங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு இந்த படத்தில் பெரிதும் உதவியது என்றே கூறலாம். ராயன் படத்தில் ஆக்ஷனில் தெறிக்க விட்ட அவர், இப்படத்தில் மிகுந்த பக்குவமாக கதையை கையாண்டிருப்பார். சிறு உணர்வுகளையும் அழகாக பார்வையாளர்கள் மீது கடத்திவிட்டார் என்றே படம் பார்த்த அனைவரும் கூறினர். படத்தின் கதை யாருடையது என்ற சர்ச்சை எழுந்தபோது, அது தன்னோட சொந்த ஊரில் சிறு வயதில் பார்த்த கதாபாத்திரங்கள், நடந்த சம்பவங்கள் என அனைத்துயும் சேர்த்து கதையாக்கி உள்ளதாக தனுஷே கூறியிருந்தார். சொல்ல வருவதை நேர்க்கோட்டில் சலிப்பு தட்டாமல் இப்படத்தில் கச்சிதமாக சொல்லியிருப்பார்.

Also read: ‘லோகா’ படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏற்கெனவே அவர் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’, ‘குபேரா’ உள்ளிட்ட படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. அப்படி இருந்த அவருக்கு ‘இட்லி கடை’ சற்று ஆறுதலை தந்தது என்றே கூறலாம். எனினும், படத்தின் மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஒடிடி ரிலீஸ் தேதி:

இந்நிலையில், இட்லி கடை படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறவிட்டவர்களுக்கு நற்செய்தியாக படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அக்டோபர் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.