நாளை திரையரங்குகளில் வெளியாகும் கர படம்… வைரலாகும் மேக்கிங் வீடியோ!
Kara Movie Making Video Viral On Social Media: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் கர. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கர. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், பிரித்வி பாண்டியராஜ் மற்றும் கருணாஸ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த கர படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி மக்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ள நிலையில் படம் தொடர்பாக பேசியது தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகர் தனுஷ் தொடர்ந்து தனது பேச்சில் இந்த கர படம் தனது படங்களில் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தன்னுடைய இயக்குநர் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




திரையரங்குகளில் வெளியாகும் கர படம்… வைரலாகும் மேக்கிங் வீடியோ:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கர படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Arasan: சிலம்பரசனின் அரசன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்? யார் தெரியுமா?
கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Making of #KARA 💣
All yours from tomorrow ♥️
Bookings open now
🔗 https://t.co/1GVBAkPjSK#KaraFromTomorrowDirected by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd… pic.twitter.com/TQXjqF2xZv— Vels Film International (@VelsFilmIntl) April 29, 2026
Also Read… லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்