AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ

Faces Of Kara Movie Video Gets 8 Million Views: தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் கர. இந்தப் படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியான நிலையில் அந்த வீடியோ 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ
கரImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Mar 2026 19:29 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கர. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு வித்யாசமான தோற்றத்தில் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்றும் இதுவரை நீங்கள் பார்க்காத ஒரு மமிதா பைஜூவை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள் என்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் அவரது கதாப்பாத்திர போஸ்டரும் மிகவும் வித்யாசமான தோற்றத்தில் இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் வியந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதன்படி கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சாரமூடு, எம்.எஸ். பாஸ்கர், ஸ்ரீஜா ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் கவானத்தை ஈர்த்து வருகின்றது.

8 மில்லியன் பார்வைகளைக் கடந்தது தனுஷின் கர படத்தின் ப்ரோமோ வீடியோ:

அதன்படி நேற்று 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு கர படத்தில் இருந்து ஃபேசஸ் ஆஃப் கர என்ற புரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அந்த வீடியோ இணையத்தில் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… Neelira: போருக்குள் திருமணம்.. கார்த்திக் சுப்புராஜ் – ராணாவின் ‘நீளிரா’ படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியானது!

Follow Us