மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் – ஏ.ஆர்.முருகதாஸ்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் பேசியபோது அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான கஜினி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களுடன் ஒப்பிட்டு பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மதராஸி படம் கஜினி மற்றும் துப்பாக்கி மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன் - ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

Published: 

27 Jul 2025 11:01 AM

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா அளவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (Director AR Murugadoss). இவரது இயக்கத்தில் இறுதியாக இந்தி சினிமாவில் சிக்கந்தர் படம் வெளியானது. இந்தப் படத்தில் இந்தியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சல்மான் கான் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கி கொண்டிருக்கும் போதே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் அவரது 23-வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்திற்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படத்தின் பணிகளையும் மாறிமாறி பார்த்து வந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு முழுவதுமாக மதராஸி படத்தின் படப்பிடிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்தி படப்பிடிப்பை நிறைவு செய்தார். தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

Also Read… நீங்க யாரும் எதிர்பார்க்காத ஒன்னு கூலி படத்தில இருக்கு – நடிகை ஸ்ருதி ஹாசன்!

கஜினி, துப்பாக்கி மாதிரி மதராஸி இருக்கும்:

இந்த நிலையில் மதராஸி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மதராஸி படம் எப்படி இருக்க வேண்டும் என்று தான் இயக்குவதற்கு முன்பு யோசித்தாரோ அப்படியே படம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அதன்படி மதராஸி படத்தின் கதை கஜினி படத்தின் திரைக்கதை போலவும், மேலும் துப்பாக்கி படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் போல மதராஸ் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைத்து எடுத்ததாகவும் அதே போல மதராஸி படம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதராஸி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Also Read… அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?