Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3BHK : சித்தார்த் – சரத்குமாரின் ‘3பிஎச்கே’ – முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்

3BHK Movie First Song Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்கள் சித்தார்த் மற்றும் சரத்குமார். இவர்கள் இருவரின் கூட்டணியில் முற்றிலும் குடும்ப படமாக உருவாகிவரும் திரைப்படம் 3பிஎச்கே. இந்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

3BHK : சித்தார்த் – சரத்குமாரின் ‘3பிஎச்கே’  – முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்
3bhk திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 19 May 2025 23:59 PM

நடிகர் சரத்குமார் (Sarathkumar) மற்றும் தேவயானியின் (Devayani) முன்னணி நடிப்பில் குடும்ப படமாக உருவாகியுள்ள படம் 3பிஎச்கே (3BHK). இந்த படத்தில் இவர்களுடன் நடிகர் சித்தார்த்தும் (Siddharth), குட் நைட் பட நடிகை மீதா ரகுநாத்தும் (meetha raghunath) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் பரபரப்பாக நடந்து வந்தது. இந்த படமானது நடிகர் சரத்குமார் மற்றும் தேவயானியின் காம்போவில் பல வருடங்களுக்குப் பின் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri ganesh) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் வெளியாகி பிரபலமான குருதி ஆட்டம் மற்றும் 8 தோட்டாக்கள் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.  அதைத் தொடர்ந்து 3வது திரைப்படமாக இந்த 3பிஎச்கே படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் தயாராகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் கூட கடந்த 2025, ஜனவரி மாதத்தில் முழுமையாக நிறைவடைந்தது, இதைக் கொண்டாடும் விதத்தில் படக்குழு கேக் வெட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகி வந்தது. அதைத் தொடர்ந்து இந்த படக்குழு படத்தின் முதல் பாடல் “கனவெல்லாம்” என்ற பாடலின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. இந்த பாடலானது 2025, மே 21ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

3பிஎச்கே படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் சித்தார்த், சரத்குமாரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அமிரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தில் தரமான பாடல்கள் உருவாகியுள்ளது. அதில் முதல் பாடல்தான் வரும் 2025, மே 21ம் தேதியில் வெளியாகவுள்ளது. நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட இந்த படமானது, மெய்யழகன் படத்தைப் போல ஒரு பீல் குட் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த 3பிஎச்கே படத்தின் கதைக்களம் மிடில்கிளாஸ் குடும்பம் எவ்வாறு ஒரு வீட்டைக் கட்டி, அதற்காகச் சந்திக்கும் பல சவால்களைப் பற்றி இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போதுவரை இந்த படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியைப் பற்றி எந்த அறிவிப்புகளும் வெளியிடவில்லை. மேலும் இந்த படம் 2025 கோடி காலத்தில் வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்திருந்தது. அநேகமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
73 வயதிலும் செம ஃபிட்! மம்மூட்டியின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?...
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH
ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக்.. LSG-ன் பிளே ஆஃப் கனவை தகர்த்த SRH...
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
பாலிவுட் நடிகர் விக்கி கவுசலின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?...
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?
மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற உதவும் வெண்டைக்காய் நீர்?...
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?
காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாமா? பிரச்னைகள் என்ன?...
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?
ஸ்டேட் பேங்கில் ரூ.2.5 லட்சம் கடன் வாங்கணுமா? என்ன பண்ணனும்?...
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற முதியவர் - இளைஞரை கீழே தள்ளியதால் பரபரப்பு...
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை - சூரி பேச்சு!...
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் அவருடன்தான்- வெற்றிமாறன்...
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு - CM MK ஸ்டாலின்...
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு
விஷாலுடன் காதல் - திருமணம் எப்போது? - சாய் தன்ஷிகா அறிவிப்பு...