சீனாவில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கைச் சேர்ந்த ஹுவாங் என்பவர், தான் செல்லப் பிராணியாக வளர்த்து வந்த விஷப்பாம்புக்கு உணவு கொடுக்க முயன்றபோது, அது அவரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த விஷம் அவரது ரத்த உறைதல் செயல்பாட்டை கடுமையாக பாதித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கடிக்கப்பட்ட விரலில் திசுக்கள் அழுகி, இறுதியில் அவரது விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஹுவாங் கூறுகையில், “பாம்பின் விஷம் என் ரத்த ஓட்டத்தையே பாதித்தது.