பிக் பாஸ் பைனல் போட்டியாளர்களைப் போட்டு தாக்கிய பழைய போட்டியாளர்கள்.. வைரலாகும் புரோமோ!
Bigg Boss Tamil 9 Finale: தமிழில் சிறப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது பழைய போட்டியாளர்களும் பைனல் வீக்கில் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த வகையில் பைனல் போட்டியாளர்களை, பழைய போட்டியாளர்கள் தாக்கிப் பேசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
எந்த ஆண்டிலும் இல்லாத கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கி, பெரும் விமர்சனங்களைப் பெருவரும் நிகழ்ச்சிதான் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil). இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay sethupathi) தொகுக்க, கிட்டத்தட்ட 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. முதல் இரு வாரத்திலே இந்த நிகழ்ச்சியில் இருந்து கிட்டத்தட்ட 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், 3வது வாரத்தில் வால்ட் கார்ட் போட்டியார்களும் நுழைந்திருந்தனர். அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியானது மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. மேலும் மற்ற எந்த சீசன்களிலும் இல்லாதது போல, இந்த பிக் பாஸ் சீசன் 9 தொடங்கியதிலிருந்தே பெரும் விமர்சனங்கள் இருந்துவந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், பழைய போட்டியாளர்கள் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கும் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கும் புது டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது, பழைய போட்டியாளர்களை விடவும் இந்த பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்தில் இருக்க தகுதியில்லாத பைனல் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து கூறவேண்டும். இந்த டாஸ்கில் அரோரா, சபரி மற்றும் சாண்ட்ராவை பழைய போட்டியாளர்கள் குறிவைத்து தாக்கி பேசியுள்ளனர்.




இதையும் படிங்க: 2026-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது?
பிக் பாஸ் சீசன் 9 தமிழ் 94வது நாளின் முதல் புரோமோ வீடியோ :
#Day94 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/gZSQfdel5w
— Vijay Television (@vijaytelevision) January 7, 2026
இந்த புரோமோவில் ரம்யா ஜோ மற்றும் அப்சரா மீண்டும் நுழைந்துள்ளார். மேலும் அதையயடுத்து கொடுக்கப்பட்ட டாஸ்கில், ரம்யா ஜோ மற்றும் அப்சரா இருவரும் சாண்ட்ராவை இந்த போட்டியின் இறுதிவரை இருக்க தகுதி இல்லாதவர், அவருக்கு பதில் நான் அந்த இடத்தில் இருக்கலாம் என கூறினார்கள். மேலும் பிரவீன் ஆரோராவையும், வியானா சபரியையும் இந்த பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியின் பைனல் வாரத்தில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என வெளிப்படையாக பேசியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட ஷூட்டிங் நிறைவு.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ!
இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் தற்போதுவரை 94 நாட்களை கடந்துள்ள நிலையில், 2026 ஜனவரி 18ம் தேதியோடு முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது. அண்ட் வகையில் இந்த் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு திவ்யா, அரோரா மற்றும் வினோத் போன்ற போட்டியாளர்கள் முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.