2026 தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பல சமயங்களில் அவரது கணிப்புகள் தவறாக நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அவை மக்களிடையே எப்போதும் ஒரு விதமான பரபரப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கி வருகிறது. கடந்த 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான மிஷெல் டி நோஸ்ட்ரடாம், நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1555 ஆம் ஆண்டு வெளியான அவரது Les Propheties என்ற நூலில், உலகம் குறித்து கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.