ஒரு திருமணத்தில் கடைசி நேரத்தில் நடந்த ஒரு சிறிய தவறு, சமூக வலைதளங்களில் வைரலான சம்பவமாக மாறியுள்ளது. திருமண சடங்கின் முக்கியமான கட்டமான தாலி கட்டுவதற்கு முன், குங்குமம் இல்லை என்பதை மணமகன் மற்றும் மணமகள் கவனித்துள்ளனர். இதனால் திருமணம் தாமதமாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது குடும்பத்தினர் என்ன செய்வது என்று குழம்பினர். இந்த நிலையில், ஒருவர் உடனடியாக ப்ளிங்கிட் செயலியில் குங்குமத்தை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் பதினாறு நிமிடங்களில் வரும் என தெரிவிக்கப்பட்டது. வீடியோவில், மணமகன் இந்த விஷயத்தை சிரிப்புடன் விளக்குகிறார்.