பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த 10 ஆண்டுகளாக தன் உணவில் கோதுமை மாவை தவிர்த்து, சோளம் மற்றும் ராகி மாவுகளை மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இது தனது உடல்நலத்திலும் செரிமானத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். வட இந்தியர்களின் அன்றாட உணவில் டால் மற்றும் ரொட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், உணவை மாற்றாமல், பயன்படுத்தும் மாவை மாற்றினால் உடலில் பெரிய வித்தியாசம் தெரியும் என தெரிவித்துள்ளார்.