AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குட் பேட் அக்லி படத்திற்கு மீண்டும் சிக்கல்… சட்ட நடவடிக்கை எடுக்க கஸ்தூரி ராஜா முடிவு

Director Kasthuri Raja: நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியானதில் இருந்தே படம் தொடர்பான சர்ச்சைகளும் எழுந்து வந்தது. அதில் குறிப்பாக படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் குறித்து சர்ச்சை எழுந்ததுதான் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்கு மீண்டும் சிக்கல்… சட்ட நடவடிக்கை எடுக்க கஸ்தூரி ராஜா முடிவு
கஸ்தூரி ராஜா, அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 May 2025 10:26 AM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இதில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் அஜித் குமாருக்கு நாயகியாக நடித்து இருந்தார். நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இந்த ஆண்டு முன்னதாக வெளியான விடாமுயற்சி படத்திலும் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளை எதிர்க்கொண்டு வருகின்றது. ஆனால் படம் வெளியாகி 47 நாட்களை கடந்த ஓடிடியில் குட் பேட் அக்லி வெளியான பிறகு தற்போது மீண்டு ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா கொடுத்த நோட்டீஸ்:

குட் பேட் அக்லி படம் வெளியான போது இந்தப் படத்தில் தன்னுடைய இசையில் வெளியான பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியகாக கூறி படக்குழுவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பேசிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் நீங்க புதுசா பாட்டு இசையமைத்து ஹிட் கொடுக்க முடியாமல் எங்கள் பாடல்களை பயன்படுத்தி படத்திற்கு ஹிட்டை தேடிக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கஸ்தூரி ராஜா முடிவு:

ஆனால் இந்தப் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றி மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் ஓடி முடிந்து தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேறபைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பேசிய இயக்குநரும் நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, தனது மூன்று பாடல்களான பஞ்சு மிட்டாய், ஓத ரூபா தரேன் மற்றும் தூதுவளை இலை அரச்சி ஆகிய பாடல்களை சமீபத்திய திரைப்படங்களில் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதால் வருத்தமடைந்ததாகக் கூறினார்.

மேலும் இன்றைய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இசையமைப்பாளர் தங்களுடைய உண்மையான படைப்புகளை உருவாக்கவில்லை மற்றவற்றில் இருந்து காப்பி தான் செய்கிறார்கள் என்றும் கஸ்தூரி ராஜா விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பழைய பாடல்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை ஆனால் உரிய நபர்களிடம் அதுகுறித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us