கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்துடன் நடிக்கும் நாகர்ஜுனா?
Actor Nagarjuna: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக 40 ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் நாகர்ஜுனா (Actor Nagarjuna). அடுத்த தலைமுறையான இவரின் மகன்கள் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையிலும் நாகர்ஜுனா தனது இடத்தை யாருக்கும் கொடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். நாகர்ஜுனா தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் தற்போது நடிகர் நாகர்ஜுனார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சௌபின் ஷாகிர், உபேந்திரா ராவ், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படதின் ஷூட்டிங் முடிந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு முன்னதாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2-வில் இணைந்த நாகர்ஜுனா?
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் நாகர்ஜுனா தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளனதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு பாஸாக இரண்டாம் பாகத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் தற்போது நாகர்ஜுனா நடிக்க உள்ளதாக அடுத்த தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த ஜெயிலர் 2 படத்தை தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.