ஐமேக்சில் வெளியாகும் தக் லைஃப்… படக்குழு கொடுத்த அப்டேட்!
Thug Life: நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் திரையரங்குகளில் தற்போது வெளியாக உள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ள நிலையில் ரசிகர்களுக்கு திரை அனுபவத்தை மேலும் சிறப்பானதாக்க படத்தை ஐமேக்சில் வெளியிட முடிவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் விசயமாக உள்ளது தக் லைஃப் படம் தான். இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியான போதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கு காரணம் நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்குவதுதான். மேலும் இந்தப் படத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகர் சிலம்பரசன் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன். சான்யா மல்கோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தக் லைஃப் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து வருகிறார்.
மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக கல்யாணம் காட்சியில் இவர்கள் கூட்டணியில் வெளியாகும் பாடல் நிச்சயமாக வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்திலும் இந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜூன் மாதம் வெளியாகும் தக் லைஃப்:
தக் லைஃப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அடுத்தடுத்து நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட ரசிகர்கள் படத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் பான் இந்திய அளவில் வெற்றி பெற முன்னதாக படக்குழு ஓடிடி வெளியீட்டை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்கு பிறகே வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.
படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A legacy reborn @ikamalhaasan #ManiRatnam #Thuglife storms into IMAX June 5th — where the master storyteller and the iconic performer bring their vision to life on the biggest screen.
Experience the revolution in its most immersive form @IMAX #Thuglife #IMAX #KamalHaasan… pic.twitter.com/VId81MMuxa— Raaj Kamal Films International (@RKFI) May 26, 2025
இதனைத் தொடர்ந்து தற்ப்போது படத்தின் அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக ரசிகர்களுக்கு மாற்ற படக்குழு ஐ மேக்ஸ் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை கூட்டியுள்ளது. இது குறித்து அறிவிப்பை படக்குழு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.