உன்னி முகுந்தனின் சர்ச்சைக்கு மத்தியில் டொவினோ வெளியிட்ட பதிவு – வைரலாகும் வீடியோ!
Actor Tovino Thomas: நடிகர் உன்னி முகுந்தின் சர்ச்சை சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையேயும் பரவி வரும் சூழலில் நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரிவேட்ட படம் குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் டொவினோ தாமஸின் (Actor Tovino Thomas) நரிவேட்டா படத்தைப் பாராட்டி உன்னி முகுந்தின் மேனேஜர் ஒரு ஃபேஸ் புக் பதிவை வெளியிட்ட காரணத்தால் அவரை உன்னி முகுந்தன் தாக்கியதாக அவர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் டொவினோ தாமஸ் படத்தைப் பார்த்து ரசிகர்கள் மிகவும் எமோஷ்னலாகும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் கடந்த 23-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நரிவேட்ட. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், பிரியம்வதா கிருஷ்ணன், சேரன் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலு மலையாளத்தில் சேரன் அறிமுகம் ஆகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டொவினோ தாமஸின் நரிவேட்ட படத்தின் கதை என்ன?
கடந்த 2003-ம் ஆண்டு கேரளாவில் நடைப்பெற்ற முத்தங்கா சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் நரிவேட்டா. கடந்த 2001 ஆம் ஆண்டு ஆதிவாசிகள் அவர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலத்தை அரசாங்கம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டடதால் அவர்கள் தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விடும் காட்சிகளை வீடியோவாக நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் நரிவேட்டா படம் கண்களையும் மனதையும் நிறைய வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் டொவினோதாமஸின் எக்ஸ் தள பதிவு:
#Narivetta Malaysia 🇲🇾 from This week .@ttovino #Narivetta pic.twitter.com/vMLBbTvbPH
— Dream Screens International Pty Ltd (@DreamScreensInt) May 27, 2025
இந்தப் நிலையில் திரையரங்குகளில் நரிவேட்டா படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் திரையரங்குகளை மற்ற மாநிலத்திலும் காட்சிகளை அதிகப்படுத்தியுள்ளனர். மேலும் படம் மலேசியாவில் இந்த வாரம் முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று நடிகர் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.