மாமன் படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் வீடியோ
Maaman - Deleted Scene 2 | நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான படம் மாமன். தாய் மாமா மருமகனின் பாசத்தை மையமாக வைத்து வெளியானை இந்தப் படத்திற்கு பாசிட்டிவான கமெண்ட்ஸ்கள் வருவது போல சில நெகட்டிவான விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடித்தப் படம் மாமன். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சூரியின் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை சுவாசிகா சூரியின் அக்காவாக இந்தப் படத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், பாலா சரணவன், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், கீதா கைலாசம் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. கோடை விடுமுறையை டார்கெட்டாக வைத்து வெளியான இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமைந்தது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
சூரியின் மாமன் படத்தின் கதை என்ன?
திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கும் நடிகர் சூரியின் அக்கா சுவாசிகாவிற்உ குழந்தை பிறக்கிறது. அந்த குழைந்தையை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார் சூரி. அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே அவனுக்கு எல்லாமே நடிகர் சூரி தான் செய்கிறார். இப்படி மாமாவின் செல்ல மருமகனாக அந்த குழந்தை நடிக்கிறார்.
இந்த நிலையில் மருத்துவராக வேலை செய்யும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தொடர்ந்து பிறந்ததில் இருந்தே மாமாவுடன் வளர்ந்த அந்த சிறுவன் திருமணத்திற்கு பிறகும் மாமா சூரியுடனே இருக்கிறான். இரவில் தூங்கும் போது கூட அந்த சிறுவன் சூரியுடனே இருக்கிறார்.
இந்த சிறுவனின் ஹைப்பர் ஆக்டிவ் குணம் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இடையே பிரச்னையை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
மாமம் படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனம்:
நடிகர் சூரி நடிப்பில் வெளியான மாமன் படம் என்ன தான் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்தாலும் திருமணம் ஆன இருவருக்கு இடையே காட்டப்படும் சில காட்சிகள் பார்வையாளர்களிடையே அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்த அதிர்ப்த்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட கதைகளை கொண்டாடுவது வருத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
மாமன் படத்தில் இருந்து வெளியான டெலீட்டட் சீன்:
#Maaman continues its victorious run in theatres—and here’s something extra! Watch Deleted Scene #2 now!https://t.co/rRw8PPApKG@sooriofficial‘s Maaman
🎫 Book your tickets now: https://t.co/6Nn3Qq0hay | https://t.co/tBaJStBqRW
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical pic.twitter.com/LMIiRxFcCK— Lark Studios (@larkstudios1) May 27, 2025