அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் வாலி… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Vaalee Movie Re Release Update: தமிழ் சினிமாவில்ந் அடிகர் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வாலி. இந்தப் படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் திரிஅயரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த 1-ம் தேதி மே மாதம் 1999-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வாலி. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கி இருந்தார். இது அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் தான் நடிகர் அஜித் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணன் அஜித் குமார் வில்லனாகவும் தம்பி அஜித் குமார் நாயகனாகவும் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோதிகா, விவேக், லிவிங்ஸ்டன், பாண்டு, ராஜிவ், பாலாஜி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் வாலி:
வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் சினிமாவில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் பல ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் அஜித் குமார் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த வாலி படமும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் வெளியாகும் செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
May 1 Locked 🔥 #AKBirthdayCelebration pic.twitter.com/KzvdZVEjb2
— IFPA ASSOCIATION (@priyanaair) April 21, 2026
Also Read… இந்த புகைப்படத்தில் இருக்கு சிறுவன் யார் தெரியுமா? சீரியல் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகர்!


