கர படத்தின் விழாவில் கலகப்பாக பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு
Actor Suraj Venjaramoodu: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மலையாள சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. தொடர்ந்து மலையாள சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் அடுத்தடுத்து பல ஹி காமெடியைக் கொடுத்துள்ளார். பிறகு மலையாள சினிமாவில் கதையின் நாயகனாகவும் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்து வந்தார். தொடர்ந்து நாயகன், காமெடியன் மற்றும் சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தற்போது தமிழ் மொழியிலும் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் தமிழ் மொழியில் வெளியகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கிய யூத் படத்தில் அவரது அப்பா கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் அவரது நடிப்பில் கர படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




கர படத்தின் விழாவில் கலகப்பாக பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு:
அதன்படி சுராஜ் வெஞ்சரமூடு பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம். இவ்வளவு பெரிய மேடையில் நான் பேசுவது இதுவே முதல் முறை. இயக்குனர் விக்னேஷ் ராஜா சார், உங்கள் முதல் படத்தை நான் பார்த்தேன். அதில் அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, அதன் திரைக்கதை மிக வலிமையாக இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, உங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஆழமாக எழுந்தது. அதன் பிறகு, ஒரு நாள் அவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. 1990-களின் பின்னணியில் அமைந்திருந்த அந்தக் கதையை அவர் என்னிடம் விவரித்தார்; அதில் நான் ஒரு DSP கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது மறக்க முடியாத பல நினைவுகள் எனக்குக் கிடைத்தன. இயக்குனர் விக்னேஷ் ஒரு ‘ஹிட்மேன்’ (Hitman) போன்றவர். அதாவது, வெற்றிகளை வேட்டையாடும் ஒரு ‘கில்லர்’ இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகத் தெளிவாக எனக்கு விளக்கினார்.
அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படத்திற்காகவும் நான் ஏற்கனவே அவருக்குத் தேதிகளை (dates) ஒதுக்கிவிட்டேன். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் சாருடன் நான் ஏற்கனவே ‘வீர தீர சூரன்’ படத்தில் பணியாற்றியுள்ளேன்; இப்போது ‘Kara’ படத்திலும் அவருடன் மீண்டும் பணியாற்றியுள்ளேன். ஜி.வி. பிரகாஷ் குமார் சார், எனது முதல் தமிழ்ப் படத்திற்கும், எனது இரண்டாவது படமான ‘வீர தீர சூரன்’ படத்திற்கும், இப்போது எனது மூன்றாவது படத்திற்கும் எனத் தொடர்ந்து நீங்கள் தான் இசையமைத்துள்ளீர்கள். தயவுசெய்து எனது அடுத்த படத்திற்கும் நீங்களே இசையமைத்துத் தர வேண்டும், சார். கர படத்தில் நடித்ததற்காக, தனுஷ் சார் நிச்சயமாக விருதுகளை வெல்வார். இயக்குனருக்கும் நிச்சயம் விருதுகள் கிடைக்கும். மமிதா பைஜுவும் நானும் இணைந்து நடிக்கும்படியான காட்சிகள் (combination scenes) இந்தப் படத்தில் இல்லை. தனுஷ் சாருக்கும் எனக்கும் இடையே ஒரு சிறிய ஒற்றுமை இருக்கிறது.
Also Read… Kara Movie: தனுஷின் கர படத்திற்கு கிடைத்தது சென்சார்.. யாரெல்லாம் படத்தை பார்க்கலாம் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் சுராஜ் வெஞ்சரமூடு பேச்சு:
#SurajVenjaramoodu about #Kara:
Hello everyone. This is the first time I’m speaking at such a big event. Director Vignesh Raja sir, I watched your debut film — it had everything, especially strong writing. After seeing that film, I really wanted to work with you. Later, I got a…
— Movie Tamil (@_MovieTamil) April 19, 2026
Also Read… சல்மான் கான் – வம்சி பைடிபைலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு