AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன் – அப்பாஸ் ஓபன் டாக்

Actor Abbas Recent Interview Viral On Social Media: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றப் படம் காதல் கொண்டேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக நடிகர் அப்பாஸிடம் கேட்கப்பட்டதாகவும் அவர் அதனை நடிக்காமல் தவறவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன் – அப்பாஸ் ஓபன் டாக்
அப்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Mar 2026 15:19 PM IST

தமிழ் சினிமாவில் 90 மற்றும் 2000-களில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தார் நடிகர் அப்பாஸ். தொடர்ந்து பலப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகர் அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் அவர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர் வெளிநாட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியமால் இருந்த திரையுலகினர்களுக்கு மத்தியில் ஹேப்பி ராஜ் படக்குழு அவரை கண்டுபிடித்து படத்தில் நடிக்க வைக்க சம்மதிக்க வைத்துள்ளனர். இதன் காரணமாக தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் நடித்துள்லது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகர் அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் நேற்று 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன்:

இந்த நிலையில் அந்தப் பேட்டியில் செய்தியாளர் காதலுக்கு மரியாதை படத்தில் நடிக்காமல் மிஸ் செய்துவிட்டேன் என்று வருத்தப்பட்டீர்களா என்று கேட்டதற்கு. ஆமா ரொம்ப நல்லப் படம். அதில் நடிக்கவில்லை என்று வருத்தப்பட்டேன் என்று நடிகர் அப்பாஸ் தெரிவித்து இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடித்து இருந்த நிலையில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜயின் நடிப்பு கெரியரில் இது ஒரு மைல்கல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அப்பாஸ் இந்தப் படம் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Dhurandhar 2: பான் இந்திய வசூல் சாதனை.. 8 நாட்களில் ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் அப்பாஸ் பேச்சு:

Also Read… பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள படக்குழு – வைரலாகும் தகவல்

Follow Us