AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கண்ணை குத்த வந்த முருகன் வேல்… நூலிழையில் தப்பிய விஜய்.. திகைத்து நின்ற கட்சியினர்.. என்ன நடந்தது!

TVk Leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் விஜய்யின் கையில் இருந்த முருகன் வேல் அவரது கையில் இருந்து நழுவி கண்களை குத்த வந்தது. இதில், நூலிழையில் விஜய் தப்பித்தார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

கண்ணை குத்த வந்த முருகன் வேல்… நூலிழையில் தப்பிய விஜய்.. திகைத்து நின்ற கட்சியினர்.. என்ன நடந்தது!
விஜய்யின் கண்ணை குத்த வந்த முருகன் வேல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 16 Apr 2026 20:44 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியலுக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முழு தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 16) சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசி இருந்தார். அப்போது, தேர்தல் அறிக்கையின் பிரதிகளை விவசாயி, ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், காவல்துறை அதிகாரி, அங்கன்வாடி ஊழியர் என்பன உள்ளிட்ட நபர்களுக்கு ஒவ்வொரு பிரதியாக விஜய் வழங்கினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் கட்சியின் தலைவர் விஜய்க்கு பல்வேறு பரிசுகளை அளித்தனர். இதில், முருகர் வேலை கட்சியின் தொண்டர் ஒருவர் விஜய்க்கு பரிசாக அளித்திருந்தார். அந்த வேலை, விஜய் தனது கையில் வைத்திருந்தார்.

விஜய்யின் கண்ணை குத்த வந்த முருகன் வேல்

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய முதல் பிரதியை விவசாயியான நாராயணன் என்பவருக்கு விஜய் வழங்கினார். முன்னதாக, விவசாயி நாராயணன் நெற்கதிர்கள் அடங்கிய கட்டை தவெக தலைவர் விஜய்க்கு பரிசாக அளித்தார். விஜய் அதனை பெற்றுக் கொண்ட போது, அவரது கையில் இருந்த முருகர் வேல் திடீரென கையில் இருந்து நழுவி விஜயின் கண்ணை குத்துவது போல வந்தது. இதனை சுதாரித்துக் கொண்ட விஜய் தனது இரு கண்களை மூடி முகத்தை திருப்பினார்.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் ஐயா ஒரு கீ கொடுக்கும் பொம்மை.. அண்ணாமலையின் அனல் பறக்கும் பேச்சு!

தவெக மேடையில் தொற்றிக் கொண்ட பதற்றம்

உடனே, அருகில் இருந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் அந்த முருகர் வேலை விஜய்யின் கையில் இருந்து பெற்றுக் கொண்டனர். இதைப் பார்த்த கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அய்யோ… அண்ணா.. பார்த்து… பார்த்து… கவனம் என்று ஆசுவாசமாக குரல் எழுப்பினர். உடனே, விஜய் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சகஜமான முறையில் நடந்து கொண்டார். இதனால், மேடையில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ

மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகளை கட்சியின் பரப்புரை கூட்டம் ஆகியவற்றில் விஜய் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், கட்சியின் முழு தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று தவெக அறிவிப்பு தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி, தவெக முழு தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் தான் மேற்கண்ட எதிர்பாராத நிகழ்வு நடைபெற்றது.

மேலும் படிக்க: அன்புமணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நீதிமன்றத்தில் ராமதாஸ் அதிரடி மனு!

Follow Us