இதுவரை ரூ.1,200 கோடி பறிமுதல் – தேர்தல் கண்காணிப்பாளர் முக்கிய தகவல்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1200 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் கண்காணிப்பாளர் பிரதாப் சிங்
சென்னை, ஏப்ரல் 20 : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஏப்ரல் 21, 2026 அன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையமும் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுடன் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் ஏப்ரல் 20, 2026 அன்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
- செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,938 வாக்குச்சாவடிகள் முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
- மேலும், 105 தொகுதிகள் தீவிர கண்காணிப்பு தேவைப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடி பேர் . இதில் பெண்கள் 2.93 கோடி பேரும், ஆண்கள் 2.80 கோடி பேரும் உள்ளனர். மேலும், முதன்முறையாக 14.59 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்
தேர்தல் சிறப்பு பார்வையாளர் பேசிய வீடியோ
- இதுவரை, 2,000க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அஞ்சல் வாக்கு மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 150 கண்காணிப்பு அதிகாரிகள், 130 பொதுப் பார்வையாளர்கள், 40 போலீஸ் பார்வையாளர்கள் மற்றும் மத்திய ஆயுதப்படை படையினரில் 300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மேலும் அவர் பேசியதாவது, வாக்காளர்களுக்கு சட்டவிரோத பண பட்டுவாடா மற்றும் பொருட்கள் வழங்குவதை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில். இதுவரை ரூ.1,200 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், சுமார் ரூ.500 கோடி பணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- மேலும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பார்வையாளர்களின் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அமைதியான, நியாயமான மற்றும் வன்முறை இல்லாத தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
- இதுவரை 95 சதவிகிதம் பேருக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது
- தமிழகத்தில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன என்று பேசினார்.
தேர்தல் சிறப்பு பார்வையாளரின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ
Follow Us