திமுக-அதிமுக வெவ்வேறு கட்சி கிடையாது.. இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி… சீமான் கடும் விமர்சனம்!

NTK Conference Seeman Speach: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கட்சிதான் எனவும், இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி தான் என்று திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திமுக-அதிமுக வெவ்வேறு கட்சி கிடையாது.. இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சி... சீமான் கடும் விமர்சனம்!

திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சி கிடையாது

Published: 

22 Feb 2026 10:22 AM

 IST

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடக் கூடிய 234 வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மாநாட்டில் பேசியதாவது: இங்கு கூடியிருப்பவர்கள் அரசியல் ரீதியாக கூடவில்லை, தமிழர்கள் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வோடு கூடியுள்ளனர். எங்களுடைய கனவு ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் கிடையாது. ஆட்சி முறை மாற்றம் ஆகும். 5- ஆவது முறையாக எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே. கடந்த 2016 தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளை பெற்றிருந்தோம். இதே மற்ற கட்சிகள் என்றால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், நாம் கொண்ட உறுதி மற்றும் லட்சியத்தால் தொடர்ந்து தனித்து போராடி வருகிறோம்.

அரசியல் சுதந்திரத்துக்காக தனியாக நிற்கிறோம்

நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. . அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். அதுவும் மக்களுக்காகவே தனித்து நிற்கின்றோம். படிக்கும் மாணவர்களுக்கு பணம் வழங்குகின்றனர். ஆனால், படித்து முடித்த பின்னர் பணம் வராது. அவர்களுக்கான வேலையை உருவாக்க வேண்டும். அதுதான் ஆட்சி முறையாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இலவசம். ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் சம்பளமாம். இலவசம் வாங்கும் அம்மா கையில் 2 லட்சம் கடன் உள்ளது. தனியார் மருத்துவமனையில் சிறந்த மருத்துவம் கொடுக்க முடியும் என்றால் அரசு மருத்துவமனையில் ஏன் முடியாது.

மேலும் படிக்க: பரிதாபமான நிலையில் தவெக.. திமுக – தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி..

திமுக-அதிமுக இரண்டுமே ஊழலில் திளைத்த கட்சிதான்

கடன் அதிகரிப்பு நாட்டின் வளர்ச்சியாக எப்படி பார்க்க முடியும். திமுக, அதிமுக இரண்டுமே ஒரே கட்சி தான். இரண்டும் ஒரே இடத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்று பயிற்சி எடுத்த கட்சி ஆகும். இரண்டும் ஊழல் கட்சி. இது, திருடர்கள் முன்னேற்ற கழகம். அது அனைத்துலக திருடர்கள் முன்னேற்றம் ஆகும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் என்ன மாற்றம் உள்ளது. எந்த இடத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றம் இருக்கிறது. இவர்கள் யாருடனும் சேராமல் தனித்து நிற்கின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்.

மொழி புரட்சி தொடர்கிறது

மனசாட்சியின் படி செல்கின்றோம். அதனால் தான் தனியாக செல்கின்றோம். மேடைக்கு முன் கூடியிருந்த நாம் தமிழர் கட்சியினர் இது ரசிகர் கூட்டம் இல்லை. , இலட்சிய கூட்டம். பணமும், பதவியும், சீட்டும், நோட்டும் தான் என்றால் நாம் தமிழர் கட்சி பணத்துக்காக கிடையாது. இந்தி திணிப்புக்கு எதிராக தன் உயிரை தந்த பாட்டன் நடராஜன் மற்றும் தாளமுத்து தொடங்கிய மொழி புரட்சி இன்னும் தொடர்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..

Related Stories
யாருடன் கூட்டணி.. ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு அவசர கூட்டம்.. முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
ஆதரவாளருக்கு சீட் கேட்ட ஓபிஎஸ்? மு.க.ஸ்டாலின் கூறிய பதில்.. ஏமாற்றத்தில் பன்னீர் செல்வம் எடுத்த முடிவு!
தொகுதி பங்கீடு பேச்சு.. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்.. முதல்வர் பிறந்தநாளில் பட்டியல் வெளியீடு!
நாதக வேட்பாளராக களமிறங்கும் வீரப்பன் மகள் வித்யாராணி… மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்!
வழக்கு போடுவியா? போடு நாங்கள் பார்க்காத மிசாவா? மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!