AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி”.. ஓபிஎஸ் மீது மரியாதை உள்ளது.. நயினார் நாகேந்திரன்

அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

“பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி”.. ஓபிஎஸ் மீது மரியாதை உள்ளது.. நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Feb 2026 13:57 PM IST

திருச்சி, பிப்ரவரி 21: பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் மார்ச் 11ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர்பான இறுதி முடிவை அறிவிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: “விஜய் கை காட்டுபவரே வேட்பாளர்”.. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தவெக எச்சரிக்கை!!

மக்கள் முடிவு செய்வார்கள்:

தொடர்ந்து பேசிய அவர், 200 இடங்களில் திமுக வெற்றி பெறுவோம் என்கிறார்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எவ்வளவு சதவீதம் நிறைவேற்றி உள்ளது என்பதை திமுக தலைவர்கள் மாற்றி மாற்றி கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கெனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல், மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை திமுக அரசு கொடுக்க தொடங்கியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சரியில்லை:

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம் ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறவில்லை. திமுக அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்குகள் உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை.

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணி:

பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் திமுக கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது, திமுக கூட்டணி வலுவிழந்து உள்ளது. இந்த நிலையில்தான் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள்.

இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார். அப்போது அவரிடம், பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணியில் சேர்கிறார்கள் என யாரை குறிப்பிடுகிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, “நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க: திருச்சியில் நடக்கும் நாம் தமிழர் கட்சி மாநாடு.. 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

ஓபிஎஸ் மீது மதிப்பு உள்ளது:

ஓபிஎஸ் மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக்கொண்டு, நிதி கொடுக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது என்று அவர் கூறினார்.