AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!

Puducherry Rangasamy Set to Become CM for the 5th Time: இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 09 May 2026 07:50 AM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 16வது சட்டசபையை அமைப்பதற்கான அரசியல் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனநாயகக் கடமையான தேர்தல் முடிவடைந்த நிலையில், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), மக்கள் செல்வாக்குடன் மீண்டும் அரியணை ஏறத் தயாராகி வருகிறது. புதுச்சேரியின் மொத்தமுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்களின் எண்ணிக்கை 16 ஆகும். நடந்து முடிந்த தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அபார வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிக்க : தவெகவுடன் கூட்டணி இல்லை, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு – கம்யூனிஸ்ட் கட்சிகள் பரபரப்பு தகவல்

பதவியை பங்கிடுவதில் குழப்பம்:

இதில், என்.ஆர்.காங்கிரஸ் – 12 தொகுதிகள், பாஜக – 4 தொகுதிகள், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா 1 தொகுதி வெற்றி பெற்றன. மொத்தம் 18 இடங்களைப் பெற்றுள்ள இந்தக் கூட்டணி, ஆட்சியமைக்கத் தேவையான 16 இடங்களை விட கூடுதல் பலத்துடன் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் மீண்டும் ஒரு நிலையான ஆட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சர் பதவியை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் புதுவை வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டனர். ஆனால் ரங்கசாமி நேரம் ஒதுக்கி கொடுக்காததால் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை.

ஆட்சியமைப்பதற்கான நகர்வுகள்:

இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்கான முன்னோட்டமாக, முதலமைச்சர் ரங்கசாமி தனது முந்தைய பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரங்கசாமி, 18 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவருடன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் உடனிருந்து தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ரங்கசாமி புதுச்சேரியில் (2001, 2006, 2011, 2021) 5வது முறையாக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழாவும் எதிர்பார்ப்புகளும்:

வரும் மே 13ம் தேதி புதன்கிழமை, புதுச்சேரியின் முதலமைச்சராக ரங்கசாமி மீண்டும் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான விழா ஏற்பாடுகள் தற்போது ஆளுநர் மாளிகை மற்றும் பொது இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அமைச்சர் பதவி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடக்கத்தில் சற்று இழுபறியாக இருந்தாலும், தற்போது சுமூகமான முடிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு பதவியேற்புக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இந்தத் தேர்தல் முடிவு மற்றும் புதிய ஆட்சியின் உதயம், புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் புதிய வேகத்தைத் தரும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநில அந்தஸ்து மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கிய கோரிக்கைகளில் இந்தக் கூட்டணி அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : காலத்தின் கட்டாயம் – தவெகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

Follow Us