AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி காங்கிரஸில் திடீர் திருப்பம்… முன்னாள் மாநில தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்!

Puducherry Congress : புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஏ. வி. சுப்ரமணியன் அந்தக் கட்சியில் இருந்து விலகி உள்ளார். தனத ராஜினாமா கடிதத்தை மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் அளித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன.

புதுச்சேரி காங்கிரஸில் திடீர் திருப்பம்… முன்னாள் மாநில தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்!
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கட்சியில் இருந்து விலகல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 28 Mar 2026 13:02 PM IST

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தவர் ஏ. வி. சுப்பிரமணியன். காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த இவர், கடந்த மூன்று முறை புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ஏ. வி. சுப்பிரமணியன் நீக்கப்பட்டு, மக்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஏ. வி. சுப்பிரமணியன் கட்சியில் இருந்து விலகுவதாக புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் எம். பி. க்கு கடிதம் அனுப்பி உள்ளார். புதுச்சேரி மாநில இண்டி கூட்டணியில் உள்கட்சி பூசல் ஏற்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கட்சியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பா

இதனிடையே, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு ஏ. வி. சுப்பிரமணியன் கட்சி தலைமையிடம் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு கட்சி தலைமை வாய்ப்பு வழங்க மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில், முன்னால் மாநிலத் தலைவர் ஏ. வி. சுப்பிரமணியன் கட்சியில் இருந்து விலகி உள்ளார். புதுச்சேரி மாநில இண்டி கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பார் என்ற மோதல் போக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே இருந்து வருகிறது. இதன் காரணமாக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.

மேலும் படிக்க: தட்டான்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ்-திமுக இடையே நீடிக்கும் குழப்பம்

இதனால், கூட்டணி கட்சியில் இருந்தால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தேமுதிக ஆகியவை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. மேலும், புதுச்சேரியில் 6 சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எதிர் எதிர் அணியில் போட்டியிட உள்ளனர். இதில், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு மறுத்துவிட்டனர்.

புதுச்சேரி இண்டி கூட்டணியில் அதிரடி திருப்பம்

இதனால், காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி குழப்பம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி இண்டி கூட்டணியில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் தான், தற்போது புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த ஏ. வி. சுப்பிரமணியன் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி சீட் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு… பானை சின்னம் ஒதுக்காததற்கு காரணம் என்ன!

Follow Us