AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!

Ntk Chief Coordinator Seeman: தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்ட 4 தேர்தல்களில் பணம் இல்லாத காரணத்தால் தோல்வியை சந்தித்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக பேசினார். மேலும், வாக்குக்காக பணம் தரமாட்டேன் என்றார்.

பணம் இல்லை.. அது ஒன்னு தான்.. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமான பேச்சு!
தென்காசி பிரசாரத்தில் சீமான் உருக்கமான பேச்சு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 11 Apr 2026 21:52 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 11) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற 4 சட்டமன்ற தேர்தல்களில் நான் போட்டியிட்டு உள்ளேன். அந்த தேர்தல்களில் அனைத்துமே நான் தோல்வி அடைந்துள்ளேன். இந்த தேர்தல்களில் தோற்றது நான் அல்ல. நீங்கள் தான் தோற்கடித்தது. நீங்கள் தான் தோற்றுப் போனீர்கள். ஆனால், எதற்கும் அஞ்சாமல் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறேனா. என்னை பார்த்தால் தோற்றவன் போல தெரிகிறதா.

பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்

தொடர் தோல்விகளால் துவண்டு படுத்து விட்டேனா. தமிழகத்தை பொறுத்தவரை பணம் இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தால், கக்கன் எப்படி முதல் அமைச்சராக வந்திருக்க முடியும் என்பதை அனைவரும் யோசித்துப் பார்க்க வேண்டும். பணம் இல்லாத ஒற்றை காரணத்தால் உடன் பிறந்த நான் தோற்றுப் போய் நிற்கிறேன். அப்படி என்றால், தகுதி என்பது எதிலிருந்து வருகிறது. பணத்திற்கு தகுதி இருந்தால் முதலாளிகளுக்கான அதிகாரம் தான் வரும்.

மேலும் படிக்க: தலைமை செயலர் – டிஜிபி வரிசையில் உள்துறை செயலர் மாற்றம்.. கோட்டையில் அதிரும் புதிய நியமனங்கள்!

ஜாதி, மதத்தை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்கவில்லை

உங்களுக்கு எப்படி அதிகாரம் வரும். பணம் மட்டுமே அரசியலை தீர்மானிக்கும் என்றிருந்திருந்தால் காமராஜர் எப்படி முதல்வராக ஆட்சி புரிந்திருப்பார். நான் பணமாக உங்கள் முன்னிலையில் இல்லை. பிறந்த இனமாக உங்கள் முன்னாடி நிற்கிறேன். இந்த கருத்தை நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ அன்றைய தினம் என்னை நீங்கள் வெற்றி பெற வைத்தால் போதும். நான் ஜாதி, மதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஓட்டு கேட்கவில்லை. நாம் பிறந்த இனம் தமிழ் இனம் என்பதை மட்டுமே வைத்து வாக்குகளை கேட்டு வருகிறேன்.

வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்

அதன் அடிப்படையிலேயே நாம் தமிழர் கட்சியினர் இந்த பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். நான் வெறும் முகத்தை மட்டும் காண்பித்து உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை. நல்ல நல்ல கருத்துக்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறேன். இதே போல, நான் பல கோடிகளை கொட்டி அரசியல் செய்ய வந்தவன் கிடையாது. உயர்ந்த கொள்கைகளை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்ய வந்தவன் நான். எனவே, வாக்குக்காக நான் காசு தர மாட்டேன் என்று உணர்ச்சி பொங்க சீமான் பேசினார்.

மேலும் படிக்க: ஒரு புறம் மநீம தலைவர் கமல்ஹாசன்… மறுபுறம் பாமக நிறுவனர் ராமதாஸ்.. சூறாவளி பிரசாரம் பயண திட்டம்!

Follow Us