AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தலில் தில்லுமுல்லு.. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியில் கள்ள ஓட்டு.. இளைஞருக்கு காப்பு!

Puducherry Fake Votes: புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாநில உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் போட்டியிட்ட மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் கள்ள ஓட்டு செலுத்தினார். இந்த சம்பவத்தில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேர்தலில் தில்லுமுல்லு.. விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரியில் கள்ள ஓட்டு.. இளைஞருக்கு காப்பு!
புதுச்சேரியில் கள்ள ஓட்டு செலுத்தியவர் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 11 Apr 2026 14:42 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ( வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக மாநில முழுவதும் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 1,099 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனர். அதன்படி, கடந்த சட்டமன்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், வேறு எந்த தேர்தல்களிலும் இல்லாமல் நிகழாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைக்க பெற்றது. இந்த நிலையில், புதுச்சேரி மாநில உள் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் போட்டியிட்ட நட்சத்திர தொகுதியான மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதியின் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு செலுத்திய நபர்

அதன்படி, தேர்தல் நாளன்று இந்தத் தொகுதியில் காலை முதல் மாலை வரை பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மாலையில் சுமார் 5 மணி அளவில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் ஒரு இளைஞர் வாக்கு செலுத்துவதற்காக வந்தார். அப்போது, அவரது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாக்குச்சாவடி முகவர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞர் தனது வாக்கை செலுத்தினார். அப்போது, அவர் மீது வாக்குச்சாவடி முகர்களுக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: தவெகவுக்கு ஓட்டு.. பேஸ்புக்கில் போஸ்ட்.. அதிரடி ஆக்சனில் இறங்கிய அதிகாரி!

இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்த முகவர்கள்

இதனால், அவரது ஆவணங்களை வாங்கி மீண்டும் சோதனை செய்தனர். இதில், அவர் வைத்திருந்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரை அந்த இளைஞரை வாக்குச்சாவடி முகவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, அதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வாக்குச்சாவடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து, அந்த இளைஞரிடம் காட்டேரிக்குப்பம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் விழுப்புரம் சேர்ந்த பிரசாத் என்பதும், மண்ணாடிபட்டு தொகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், அவரது வாக்கை சட்டவிரோதமாக பிரசாத் கள்ள ஓட்டாக செலுத்தியது தெரியவந்தது.

உள்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த குளறுபடி

இதைத் தொடர்ந்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடும் தொகுதி என்பதால் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்ட தொகுதியும், நட்சத்திர தொகுதியுமான மண்ணாடிப்பட்டில் ஒரு இளைஞர் கள்ள ஓட்டு செலுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: புதுச்சேரி வாக்குப்பதிவில் புதிய உச்சம்.. யாருக்குச் சாதகம்?.. கலக்கத்தில் அரசியல் கட்சிகள்..

Follow Us