AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக் கட்சியின் ‘லட்சய’ வெற்றி: கோலோச்சும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

LJK Leader Jose Charles Martin: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அமோக வெற்றி பெற்றுள்ளார். மே 4, 2026 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் தனது எதிரணி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி இந்த முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

புதுச்சேரி: லட்சிய ஜனநாயக் கட்சியின் ‘லட்சய’ வெற்றி: கோலோச்சும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!
லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 May 2026 15:51 PM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 4-ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அபார வெற்றி பெற்றுள்ளார். லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகனான இவர், 2025-ஆம் ஆண்டு இக்கட்சியைத் தொடங்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரு அங்கமாக இத்தேர்தலைச் சந்தித்தார். ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே முன்னிலை வகித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது நெருங்கிய போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.

அரசியலில் தடம் பதிக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

இந்த வெற்றியின் மூலம் புதுச்சேரி அரசியலில் ஒரு புதிய சக்தியாக லட்சிய ஜனநாயக கட்சி உருவெடுத்துள்ளது. காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளார். தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, காமராஜ் நகர் தொகுதியை இந்தியாவுக்கே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபராக அறியப்பட்ட இவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில், அத்தொகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Also Read: Tamil Nadu Election 2026 Results LIVE: தொடர்ந்து முன்னேறும் தவெக.. விஜய் அவசர ஆலோசனை!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் அதிகரிப்பு

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட லட்சிய ஜனநாயக கட்சிக்கு இத்தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஆளும் கூட்டணியான என்.டி.ஏ (NDA) பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை நோக்கி முன்னேறி வரும் நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் வெற்றி அக்கூட்டணிக்கு கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவு, புதுச்சேரியின் எதிர்கால அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Follow Us