AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Election Commission Updates : ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு தேர்தல்.. முழு விவரம்

Election Commission Press Conference Updates in Tamil : தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் மார்ச் 15, 2026 அன்று தமிழ்நாடு தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ் குமார் வெளியிட்டார். 

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Mar 2026 09:43 AM IST
Share
Election Commission Updates :  ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு தேர்தல்.. முழு விவரம்
தேர்தல் தகவல்கள்

Tamil Nadu Election 2026 : தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் திருத்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் மார்ச் 15, 2026 அன்று தமிழ்நாடு தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஸ் குமார் வெளியிட்டார்.  தமிழகத்தில் தற்போது வரை திமுக கூட்டணி, பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு – நேரலையில் காண

 

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Mar 2026 07:00 PM (IST)

    சட்ட ரீதியான நடவடிக்கை

    தேர்தல் விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் இந்த விதிகளை பின்பற்றி நடக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

  • 15 Mar 2026 06:45 PM (IST)

    செல்போன்களுக்கு அனுமதி கிடையாது

    சட்டமன்ற தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன்களுக்கு அனுமதி கிடையாது.  வாக்குப்பதிவு மையங்களில் அமைக்கப்படும் பாதுகாப்பு கவுண்டர்களில் ஒப்படைத்துவிட்டு மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 15 Mar 2026 06:30 PM (IST)

    தேர்தல் நடத்தை விதிமுறைகள்

    தேர்தல் பிரசாரங்களுக்கு கட்சி பாகுபாடு இன்றி பொது மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.

  • 15 Mar 2026 06:19 PM (IST)

    பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு

    ரொக்க பணம் கையில் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த தேர்தல்களில் இருந்ததை போலவே ரூ.50,000-க்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

  • 15 Mar 2026 05:59 PM (IST)

    அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

  • 15 Mar 2026 05:45 PM (IST)

    பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது. அரசு விழாக்கள் நடத்த கூடாது, அமைச்சர்கள் என்ற முறையில் எந்தவிதத்திலும் பரப்புரை மேற்கொள்ள கூடாது.

  • 15 Mar 2026 05:30 PM (IST)

    தேர்தல் நடத்தை விதிமுறைகள்

    தேர்தல் முடியும் வரை எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது, பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது, ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது

  • 15 Mar 2026 05:17 PM (IST)

    தேர்தல் நேரத்தில் அதிக பேருந்துகள்

    தேர்தல் நேரத்தில் அதிக பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்பதே வெளியூர் செல்பவர்களின் கோரிக்கை

  • 15 Mar 2026 05:04 PM (IST)

    தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தேர்தல்

    வார இறுதி நாளில் தேர்தல் என்பதால் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக இருக்கும் என மக்கள் மகிழ்ச்சி

  • 15 Mar 2026 04:59 PM (IST)

    5 மாநில தேர்தல் விவரம்

    தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளது.

    வ.எண் மாநிலங்கள்  வாக்குப்பதிவு  வாக்கு எண்ணிக்கை 
    1 தமிழ்நாடு ஏப்ரல் 23, 2026 மே 04, 2026
    2 கேரளா ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
    3 புதுச்சேரி ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
    4 அசாம் ஏப்ரல் 09, 2026 மே 04, 2026
    5 மேற்கு வங்கம் 23 ஏப்ரல் 2026 மற்றும் 29 ஏப்ரல் 2026 மே 04, 2026
  • 15 Mar 2026 04:56 PM (IST)

    நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன

  • 15 Mar 2026 04:54 PM (IST)

    இடைத்தேர்தல் விவரம்

    கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் ஏப்ரல் 9 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெறும். கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் சட்டமன்ற இடங்களுக்கான இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 9 ஆம் தேதியும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெறும்.

  • 15 Mar 2026 04:53 PM (IST)

    தேர்தல் தேதி 5 மாநில விவரம்

    மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும். நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி ஒரே நேரத்தில் நடைபெறும்.

  • 15 Mar 2026 04:45 PM (IST)

    புதுச்சேரியில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்

    புதுச்சேரியில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது

    Puducherry

    Puducherry

  • 15 Mar 2026 04:36 PM (IST)

    வேட்புமனு தாக்கல் முழு விவரம்

    வேட்புமனு தாக்கல் துவக்கம்-  மார்ச் 30
    வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – ஏப்ரல் 6
    வேட்புமனு பரிசீலனை – ஏப்ரல் 7
    வேட்புமணு திருமப்பெற – ஏப்ரல் 9

  • 15 Mar 2026 04:30 PM (IST)

    தேதி வாரியாக விவரம்

    Election Date

    Election Date

  • 15 Mar 2026 04:26 PM (IST)

    தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

    தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் என அறிவிப்பு. வாக்கு எண்ணிக்கை மே 4

  • 15 Mar 2026 04:23 PM (IST)

    தபால் வாக்குகள்

    கடைசி 2 சுற்றுகளுக்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்படும்

  • 15 Mar 2026 04:22 PM (IST)

    5 வாக்காளர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடி

    தேனி வருசநாடு பகுதியில் வெறும் 5 வாக்காளர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது

  • 15 Mar 2026 04:20 PM (IST)

    சிசிடிவி கேமரா

    100 சதவீதம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா வைக்கப்படும்

  • 15 Mar 2026 04:19 PM (IST)

    செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

    வாக்குச்சாவடிக்குள் செல்லும் போது செல்போன்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. செல்போன்களை வெளியில் ஒப்படைத்துவிட்டு வாக்களிக்கலாம்

  • 15 Mar 2026 04:15 PM (IST)

    25 லட்சம் பேர் தேர்தல் பணி

    5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தமாக 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்

  • 15 Mar 2026 04:14 PM (IST)

    மே 10ம் தேதியுடன் நிறைவு

    தமிழ்நாடு சட்டமன்ற ஆயுட்காலம் மே 10ம் தேதியுடன் நிறைவடைகிறது

  • 15 Mar 2026 04:13 PM (IST)

    824 தொகுதிகளுக்கு தேர்தல்

    5 மாநிலங்களையும் சேர்த்து 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது

  • 15 Mar 2026 04:07 PM (IST)

    17.4 கோடி வாக்காளர்கள்

    5 மாநிலங்களிலும் சேர்த்து 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

  • 15 Mar 2026 04:06 PM (IST)

    ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது

    தகுதியான வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து எஸ் ஐ ஆர் பணிகள் நடத்தப்பட்டது

  • 15 Mar 2026 04:05 PM (IST)

    பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்

    எஸ் ஐ ஆர் பணிகளின்போது அதிகாரிகள், பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் – தேர்தல் ஆணையர்

  • 15 Mar 2026 04:04 PM (IST)

    தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது

    தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது- தேர்தல் ஆணையர்

  • 15 Mar 2026 03:48 PM (IST)

    50ஆயிரம் லிமிட்

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். எனவே ரூ.50ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்ல முடியாது

  • 15 Mar 2026 03:43 PM (IST)

    சற்று நேரத்தில் தேர்தல் தேதி

    வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து தேதிகளும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படும்

  • 15 Mar 2026 03:38 PM (IST)

    பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடுகள்

    பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

  • 15 Mar 2026 03:32 PM (IST)

    கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள்

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும். பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • 15 Mar 2026 03:16 PM (IST)

    அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள்

    தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் முடியும் வரை எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது, பிரச்சாரத்தின் போது கட்சிகளுடைய தனிநபர் விமர்சனம் செய்ய கூடாது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரவிருக்கின்றன.

  • 15 Mar 2026 03:16 PM (IST)

    சமீபத்தில் நடந்த ஆய்வு

    முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சமீபத்தில் தனது குழுவுடன் ஐந்து தேர்தல் மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ​​ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகளை அவர் ஆய்வு செய்தார்.

  • 15 Mar 2026 03:16 PM (IST)

    மாலை 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு

    தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அசாம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை அடங்கும். தேர்தல் ஆணையம் மாலை 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 15 Mar 2026 03:15 PM (IST)

    ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்

    இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published On - Mar 15,2026 3:06 PM

Follow Us