சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மேயர் ஆர்.பிரியா? திமுக தலைமை காட்டிய க்ரீன் சிக்னல்.. போட்டியிடும் தொகுதி இதுதான்?

Chennai Corporation Mayor R Priya : தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா போட்டியிட உள்ளதாகவும், இதற்கான தொகுதியை தேர்வு செய்து விட்டதாகவும், தேர்தல் பணிகளை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மேயர் ஆர்.பிரியா? திமுக தலைமை காட்டிய க்ரீன் சிக்னல்.. போட்டியிடும் தொகுதி இதுதான்?

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் முடிவில் மேயர் ஆர்.பிரியா

Published: 

07 Mar 2026 17:03 PM

 IST

பெருநகர சென்னை மாநகராட்சியில் பலர் மேயராக இருந்துள்ளனர். ஆனால், இவர்கள் யாரும் பெரிதளவில் பிரபலமாகவில்லை. ஆனால், கடந்த 2022- ஆண்டு நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை தனதாக்கி மார்ச் 4- ஆம் தேதி முதல் தலித் பெண் மேயராக பதவி ஏற்ற ஆர். பிரியா அனைவரது மனதிலும் இடம் பிடிக்கும் வகையில் மிகவும் பிரபலமாகி உள்ளார். இதற்கு, அவரது வெகுளித்தனமான சிரிப்பு, பேச்சு, நடவடிக்கை ஆகியவை காரணமாக இருக்கலாம். சென்னை மாநகராட்சியில் மேயராக தனது முதல் வெற்றியை பதிவு செய்த ஆர். பிரியா தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக தடம் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவருடன் பதவி ஏற்ற பல திமுக கவுன்சிலர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது வெற்றி வாய்ப்பை இழந்திருந்தனர். இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பதவிக்காலம் 1 ஆண்டில் நிறைவடைய உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 கவுன்சிலர்கள்

இதனால், மேயர் ஆர். பிரியாவுடன் சேர்த்து சுமார் 10- க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுக தலைமையிடம் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், திமுக சார்பில் வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை பெற்று அதனை தலைமையிடம் சமர்ப்பித்துள்ளனர். அத்துடன், சென்னையில் வலம் வரும் அமைச்சர்களான பி. கே. சேகர்பாபு மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளனராம்.

மேலும் படிக்க: ‘பாரதியார் இல்லம்’ பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கம் – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை மாநகராட்சி மேயர் போட்டியிடும் தொகுதி

இதில், குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனராம். இதில், தங்களின் வெற்றிக்கு சாதகமாக இருக்கும் தொகுதியாக மேயர் ஆர். பிரியா திரு. வி. க. நகர் தொகுதியிலும், துணை மேயர் மகேஷ் குமார் வேளச்சேரி சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைமை கிரீன் சிக்னல் காண்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவிக நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கிய பிரியா

ஏனென்றால், தற்போது, திரு. வி. க. நகர் தொகுதியில் திமுகவை சேர்ந்த தாயகம் கவி என்பவர் எம். எல். ஏ. வாக இருந்து வருகிறார். இவர், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த, திரு. வி. க. நகர் தொகுதி தனி தொகுதி என்பதால் 2 முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திரு. வி. க. நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கு மேயர் ஆர். பிரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான தேர்தல் பணிகளை பிரியா தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இவருடன் சேர்ந்து சென்னை மாநகராட்சியின் 5 திமுக கவுன்சிலர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ரவி.. நேரில் சந்தித்து பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்..

Follow Us
Related Stories
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி