AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Election 2026 Exit Poll Result Highlights : திமுக ஆட்சியை பிடிக்கும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

Tamil Nadu Assembly Election Exit Poll Results 2026 updates in Tamil : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளை வெளியிடப்போவதாக பல்வேறு முகமைகள் அறிவித்துள்ளன.

C Murugadoss
C Murugadoss | Updated On: 29 Apr 2026 21:11 PM IST
Share
Tamil Nadu Election 2026 Exit Poll Result Highlights : திமுக ஆட்சியை பிடிக்கும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு
தேர்தல் முடிவுகள்

மேற்கு வங்கத்தில் தேர்தலின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 142 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த பிறகு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கும். இம்முறை, மேற்கு வங்கத்துடன் சேர்த்து அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, தேர்தல் முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும். இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும். மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளை வெளியிடப்போவதாக பல்வேறு முகமைகள் அறிவித்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வாக்குப்பதிவு முடிந்த பின்னரே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகள் வெளியிடப்பட்டன

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Apr 2026 09:00 PM (IST)

    இவைதான் மொத்த கணிப்புகள்!

    ஆகமொத்தமாக கருத்துக்கணிப்புகளின் முடிவுகளின் படி பெரும்பான்மையான நிறுவனங்கள் திமுகவே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. சில நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. தவெக இரட்டை இலக்க இடங்களை வெல்லும் என்பதும் கணிப்பாக உள்ளது. இவையெல்லாம் நடக்குமா என்பதை மே4ம் தேதி தெரிந்துவிடும்

  • 29 Apr 2026 08:55 PM (IST)

    திமுகவின் நிலைமை இதுதான்!

    தற்போது, வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகபட்சமாக 103 முதல் 169 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் திமுக மற்றும் 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் 18 இடங்களிலும், பிற கூட்டணி கட்சிகள் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

  • 29 Apr 2026 08:45 PM (IST)

    திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகள் வரை

    மேட்ரிக்ஸ் நிறுவனம் – 122 முதல் 132 தொகுதிகளிலும், ரிபப்ளிக் பி மார்க் – 125 முதல் 145 தொகுதிகளிலும், அக்னி நியூஸ் சர்வீஸ் – 169 தொகுதிகளிலும், பீப்புள் இன்சைட் – 120 முதல் 140 தொகுதிகளிலும், பீப்புள் பல்ஸ் – 125 முதல் 145 தொகுதிகளிலும், ஜே பி சி டைம்ஸ் நவ் – 75 முதல் 95 தொகுதிகளிலும், வோட்டு வைப் – 103 முதல் 113 தொகுதிகளிலும், சி.என்.என்.நியூஸ் 18 – 103 முதல் 113 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது

  • 29 Apr 2026 08:38 PM (IST)

    திமுக கூட்டணி வாக்கு சதவீதம்

    திமுக கூட்டணி 45.4 சதவீதமும், திமுக மட்டும் 38 சதவீதமும் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது, வெளியான கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக கூட்டணி கூடுதலாக 10 சதவீதம் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 55.4 சதவீத வாக்கு வங்கி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

  • 29 Apr 2026 08:30 PM (IST)

    TVK Exit Poll: தவெக தொண்டர்கள் கொண்டாட்டம்

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரட்டை இலக்கம் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் தவெக தொண்டர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்

  • 29 Apr 2026 08:15 PM (IST)

    கவனிக்க வைத்த தவெக

    கருத்துக்கணிப்புகளின் படி திமுக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் புது கட்சியான தவெக இரட்டை இலக்கங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 29 Apr 2026 07:51 PM (IST)

    TVK Exit poll : தவெக முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்பு

    இண்டியா டுடே கருத்துக்கணிப்புப்படி தவெக முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்பு. தவெக 120 சீட்டுகள் வரை பெறும் என கருத்துக்கணிப்பு

  • 29 Apr 2026 07:44 PM (IST)

    ஐந்து மாநிலத் தேர்தல்கள் குறித்த வோட்வைப் கணக்கெடுப்பு

    தமிழகத்தில் திமுக 103-113, அதிமுக 114-124, டிவிகே 4-10; மற்றவை 0

    கேரளாவில், LDF 58-687, UDF 70-80, NDA 0-4, மற்றவை 0

    அசாமில் பாஜக 90-100; காங்கிரஸ் 22-33; மற்றவை 0-6

  • 29 Apr 2026 07:38 PM (IST)

    ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் குறித்த பீப்பிள்ஸ் பல்ஸ் கணக்கெடுப்பு

    வங்காளத்தில், திரிணாமுல் காங்கிரஸ் – 177-187; பாஜக – 95-100, காங்கிரஸ் 0, இடதுசாரிகள் 0-1, மற்றவை 1-2.

    தமிழகத்தில் திமுக 125 – 145; அ.தி.மு.க., 65 -80, டி.வி.கே., 18-24; மற்றவை 2-6

    கேரளாவில், LDF 55-65; UDF 75-87, NDA 0-3, மற்றவை 0.

    அஸ்ஸாமில் பாஜக 68-72; காங்கிரஸ் 22-26; மற்றவை 3-5.

    புதுச்சேரியில், என்டிஏ 16-19; ஐஎன்சி+ 10-12; மற்றவை 1-2

  • 29 Apr 2026 07:36 PM (IST)

    திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன்  கருத்து

  • 29 Apr 2026 07:31 PM (IST)

    திமுக 120-140 வரை பெறும்

    ndtvன் பீப்பில்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்புப்படி  திமுக 120-140 வரை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியீடு

  • 29 Apr 2026 07:22 PM (IST)

    புதுச்சேரியில் பாஜக 16 முதல் 20 இடங்களைப் பெறும்: ஆக்சிஸ் மை இந்தியா

    ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, புதுச்சேரியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பாஜக 16 முதல் 20 இடங்களையும், காங்கிரஸ் 6 முதல் 8 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 முதல் 7 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது

  • 29 Apr 2026 07:14 PM (IST)

    CNN -18 கருத்துக்கணிப்பு படி அதிமுக வெல்லும்

    CNN -18 கருத்துக்கணிப்பு படி தமிழ்நாட்டில் அதிமுக 144-124 சீட்டுகள் வரை முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்பு வெளியீடு

  • 29 Apr 2026 07:12 PM (IST)

    ADMK Exit Poll : அதிமுக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு

    டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு படி தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என  கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு

  • 29 Apr 2026 07:02 PM (IST)

    TVK Exit Poll: தவெக வெற்றி வாய்ப்பு

    புதுக்கட்சியான தவெக தனது முதல் தேர்தலிலேயே இரண்டு இலக்கத்தில் வெற்றி வாய்ப்புகளை பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

  • 29 Apr 2026 06:59 PM (IST)

    Assam Exit Poll Result : அசாம் ரிசல்ட் என்ன?

    ஜேவிசி தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, அசாமில் பாஜக பிளஸ் 88 முதல் 100 இடங்களையும், காங்கிரஸ் பிளஸ் 23 முதல் 33 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 29 Apr 2026 06:57 PM (IST)

    மேற்கு வங்க தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: வங்கத்தில் பாஜக 95 முதல் 110 இடங்களைப் பெறும் – பீப்பிள்ஸ் பல்ஸ்

    பி-மார்க் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும், பாஜக 150 முதல் 175 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் ஒரு இடத்தைக் கூடப் பெறுவது சாத்தியமில்லை எனத் தெரிகிறது.

    பீப்பிள்ஸ் பல்ஸ் கணக்கெடுப்பின்படி, வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 117 முதல் 187 இடங்களையும், பாஜக 95 முதல் 110 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 1 முதல் 3 இடங்களையும், இடதுசாரிகள் 0 முதல் 1 இடத்தையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது

  • 29 Apr 2026 06:51 PM (IST)

    மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களைப் பெறும்

    மேட்ரிஸ் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 29 Apr 2026 06:43 PM (IST)

    Kerala Exit Polls 2026 : கேரளாவில் பாஜக 10 முதல் 14 இடங்களைப் பெறும்

    பீப்பிள்ஸ் இன்சைட் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 66 முதல் 76 இடங்களையும், இடது ஜனநாயக முன்னணி (LDF) 58 முதல் 68 இடங்களையும், பாஜக 10 முதல் 14 இடங்களையும் பெறக்கூடும், மற்ற கட்சிகள் 0 முதல் 1 இடத்தைப் பெறக்கூடும்.

  • 29 Apr 2026 06:42 PM (IST)

    அசாமில் பாஜக ஆட்சி: பீப்பிள் இன்சைட் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

    பீப்பிள் இன்சைட் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, அசாமில் பாஜக ஆட்சி அமையும் எனத் தெரியவந்துள்ளது. பாஜக 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 34 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 4 இடங்களையும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆஜ்தக்-ஆக்சிஸ் மை இந்தியா தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, அசாமில் பாஜக 88 முதல் 100 இடங்களையும், காங்கிரஸ் 24 முதல் 36 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது

  • 29 Apr 2026 06:41 PM (IST)

    DMK Exit Poll : தமிழகத்தில் திமுக பிளஸ் கட்சிக்கு 120 முதல் 140 இடங்கள் கிடைக்கும்.

    பீப்பிள்ஸ் இன்சைட்டின் மதிப்பீடுகளின்படி, தமிழகத்தில் திமுக+ 120 முதல் 140 இடங்களையும், அதிமுக+ 60 முதல் 70 இடங்களையும், திவ்க 30 முதல் 40 இடங்களையும் வெல்லக்கூடும். மற்ற கட்சிகள் 0 முதல் 4 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • 29 Apr 2026 06:37 PM (IST)

    பீப்பிள் பல்ஸ்: ஆளும் திமுக ஆட்சி அமைக்கும்

    பீப்பிள் பல்ஸ் என்ற கருத்துக்கணிப்பு படி, தமிழ்நாட்டில் ஆளும் திமுக 125 முதல் 145 வரை இடங்களை பெற்று வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு

  • 29 Apr 2026 06:26 PM (IST)

    கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்பி கருத்து

  • 29 Apr 2026 06:21 PM (IST)

    Assembly Election Exit Poll Result : கருத்துக்கணிப்பு முடிவுகள்

    இன்னும் சற்று நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன

  • 29 Apr 2026 06:20 PM (IST)

    2021 – அசாம் சட்டமன்றத்தேர்தலில் என்ன நடந்தது?

    2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாஜக அதிக இடங்களைப் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. இடங்களின் எண்ணிக்கை 75 முதல் 85 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ​​இந்தக் கூட்டணி இந்த வரம்பிற்குள் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

  • 29 Apr 2026 06:10 PM (IST)

    2011ல் என்ன நடந்தது?

     2011 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸும் அதன் கூட்டணியும் இணைந்து 180 முதல் 182 இடங்களைப் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. மேலும், இடதுசாரிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ​​திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் 184 இடங்களை வென்ற நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் இடங்கள் 62 ஆகக் குறைந்திருந்தன.

  • 29 Apr 2026 05:55 PM (IST)

    West Bengal Assembly Election Exit Poll 2021 : மேற்கு வங்கத்தில் என்ன நடந்தது?

    மேற்கு வங்கத்தை பொறுத்த வரை, 2021 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மிகவும் துல்லியமற்றவையாக நிரூபிக்கப்பட்டன. பல கருத்துக் கணிப்புகள் திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே ஒரு கடும் போட்டி நிலவும் என்று கணித்திருந்தன, ஆனால் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்தன. அந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களையும் மட்டுமே வென்றன.

  • 29 Apr 2026 05:40 PM (IST)

    கணிப்பு என்ன ஆனது?

    திமுக கூட்டணிக்கு 177 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணி 49 இடங்களாகக் குறையும் என்றும் கணித்தது. ஆனால், உண்மையான முடிவு  திமுக கூட்டணி 159 இடங்களை வென்றது (திமுக மட்டும் 133 இடங்கள்). அதிமுக தலைமையிலான NDA கூட்டணி 75 இடங்களைக் கைப்பற்றியது.

  • 29 Apr 2026 05:25 PM (IST)

    DMK : திமுக வெற்றி என கணித்தன!

    2021-ல் பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் (Times Now-CVoter உட்பட) திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (SPA) எளிதாகப் பெரும்பான்மை பெறும் என்று கணித்தன.

  • 29 Apr 2026 05:14 PM (IST)

    2021ல் என்ன நடந்தது?

    2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் சரியான திசையைக் காட்டினாலும், துல்லியமான இடங்களின் எண்ணிக்கையில் சில மாற்றங்கள் இருந்தன.

  • 29 Apr 2026 04:55 PM (IST)

    தேர்தல் நடைபெற்றது எப்போது?

    ஏப்ரல் 9 ஆம் தேதி, அசாமில் 126 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, இன்று, ஏப்ரல் 29 ஆம் தேதி, 142 தொகுதிகளுக்கு நடைபெற்றது

  • 29 Apr 2026 04:40 PM (IST)

    West Bengal Assembly Election Exit Poll Result : மேற்கு வங்கம் சிறிது லேட்டாகும்?

    இன்று வங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால், அங்கிருந்து தரவுகள் வந்து சேர சிறிது நேரம் ஆகக்கூடும்

  • 29 Apr 2026 04:25 PM (IST)

    Assembly Election Exit Poll Result : முதலில் எந்த ரிசல்ட்?

    இன்று மாலை 6:30 மணிக்கு மேல், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், அனைத்து முகமைகளின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடத் தொடங்கும். அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், இந்த மாநிலங்களின் கணிப்புகள் முதலில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • 29 Apr 2026 04:08 PM (IST)

    இன்று மாலை 6:30 மணிக்கு மேல்

    தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகள் இன்று மாலை 6:30 மணிக்கு மேல் வெளியாகும்

  • 29 Apr 2026 04:07 PM (IST)

    Exit Poll Result : பிந்தைய கருத்துக் கணிப்பு ஏன்?

    ஐந்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். தேர்தல் முடிவுகளுக்கு முன்பு, அனைவரின் கவனமும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கணிப்புகளின் மீது இருக்கும். உண்மையான முடிவுகளுக்கு முன்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்

  • 29 Apr 2026 04:04 PM (IST)

    Assembly Election Exit Poll Result : இன்று வெளியாகிறது கருத்துக்கணிப்பு முடிவுகள்

    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐந்து மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்திற்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும்

Published On - Apr 29,2026 4:01 PM

Follow Us