Retirement corpus : 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு? ஓய்வு காலத்துக்கு திட்டமிடுபவர்கள் கவனம்!

Retirement Corpus Shock : மக்கள் இன்று ஓய்வு காலத்துக்காக பெரும்பாலும் ரூ.1 கோடி என்ற இலக்கை நிர்ணயிக்கிறார்கள். தற்சமயம் வேண்டுமானால் ரூ.1 கோடி பெரிய தொகையாக இருக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளில் விலை ஏற்றத்தின் படி அதன் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு இளைஞர்கள் ஓய்வு காலத்துக்காக திட்டமிடுவது அவசியமாகிறது.

Retirement corpus : 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு? ஓய்வு காலத்துக்கு திட்டமிடுபவர்கள் கவனம்!

மாதிரி புகைப்படம்

Published: 

17 Jun 2025 17:36 PM

 IST

இன்றைய வேகமான வாழ்க்கையில், ஓய்வு காலத்துக்கான (Retirement) திட்டமிடல் என்பது தனிநபர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக 20, 30 வயதிலுள்ள இளம் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பயணத்தை தொடங்கும் கட்டத்தில், ரூ. 1 கோடி சேமித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணம் நிஜமாகவே கை கொடுக்குமா என்றால் கேள்விக்குறி தான். கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக இருந்து வருகிறது. குறிப்பாக பலரும் ரூ.1 கோடி சேமித்தால் போதும் என்ற எண்ணத்தில் முதலீடு (Investment) செய்கின்றனர். ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவில்லை. இன்று வேண்டுமானால் ரூ.1 கோடி மதிப்பு மிக்கதாக இருக்கலாம் ஆனால் 30 வருடங்களுக்கு பிறகு இந்த தொகை சாதாரணமாக மாறிவிடும். காரணம் விலை உயர்வு (Inflation).  ஃபினான்சியல் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரையின் படி 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும், ஓய்வு காலத்தில் எவ்வளவு தொகை தேவைப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.

30 வருடங்களில் ரூ.1 கோடியின் மதிப்பு என்ன ஆகும்?

 நீங்கள் உழைத்துஅதன் மூலம் முதலீடு செய்தோ அல்லது சேமிப்பு திட்டங்கள் மூலமாகவோ ரூ.1 கோடி சேமித்து ஓய்விற்கு தயாராகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் வருடத்திற்கு 6% வட்டி வீதம் அளவிலான விலை உயர்வு தொடர்ந்தால், 30 ஆண்டுகளில் ரூ.1 கோடி இன்று இருக்கும் மதிப்பு என்ன தெரியுமா? அது வெறும் ரூ.17.4 லட்சம் என்ற மதிப்பு தான் உண்மையில் அந்த ரூ.1 லட்சத்துக்கு இருக்கும்.  அதாவது, இன்றைய நிலவரப்படி ஒரு சிறிய காரை வாங்க முடிந்த தொகை மட்டுமே உங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு வாழ்வுக்குக் கிடைக்கும். இது நம்மை பல எதிர்பாராத நிதி சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.

நம்முடைய பெற்றோரோ அல்லது உறவினர்களோ ஓய்வுபெறுவதற்கா ரூ.1 கோடி என்ற இலக்கை நிர்ணயித்திருக்கலாம். ஆனால் அவர்கள் 2025 – 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறுகிறவர்கள். நீங்கள் 2055 ஆம் ஆண்டு தான் ஓய்வு பெறுகிறீர்கள். விலை உயர்வின் தாக்கம் மிகவும் பெரியது.

செய்ய வேண்டிய முக்கிய மூன்று விஷயங்கள்

1. விலை உயர்வை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம்

நீங்கள் ரூ.1 கோடி என்ற இலக்கை வைத்தால் போதாது. அதை வருடத்திற்கு 6% விலை உயர்வுடன் சேர்த்து , ரூ.3 கோடி அல்லது ரூ.4 கோடி சேமிக்க வேண்டும். உங்கள் எதிர்கால வாழ்க்கைமுறையை வைத்து இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

2.  முதலீடு செய்யுங்கள்

பிக்சர் டெபாசிட், ஆர்டி போன்ற பாதுகாப்பான சேமிப்புகள் மட்டும் போதாது.  ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Funds) NPS, ETF போன்ற நீண்ட கால வளர்ச்சி வாய்ந்த முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.

3. உண்மையான ரிட்டர்னை கவனிக்கவும்

நீங்கள் முதலீடு செய்ததில் 10% வருமானம் வந்தால் கூட, விலை உயர்வு 6% என்றால், உங்கள் உண்மையான வருமானம் 4% தான். எனவே உண்மையான ரிட்டர்னை கவனிக்கவும்

திட்டங்களை மறு ஆய்வு செய்யுங்கள்

ஓரிரு வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் ஓய்வு திட்டத்தை சோதிக்க வேண்டும். உங்கள் வருமானம், குடும்பத் தேவை, மருத்துவச் செலவுகள், வாழ்கை நிலை போன்றவைகளை கொண்டு திட்டத்தை மாறச் செய்ய வேண்டும். இப்போது ரூ. 1 கோடி என்பது பெரிய தொகையாகத் தோன்றலாம். ஆனால் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதை வைத்துப் பாதுகாப்பாக வாழ முடியுமா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியாது. வாழ்வதற்கான மன அமைதியும், நிதி சுதந்திரமும் தான் முக்கியம்.

Follow Us
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..
பழங்களில் எலி மருந்து தடவும் சாலையோர வியாபாரி - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
டெஹ்ரானில் இஸ்ரேல் தாக்குதல்: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தீவிரம்
ஏசியின் உள்ளே 5 பாம்புகள் - திருவனந்தபுரத்தில் பரபரப்பு